சேதுபதி மரபு

சேதுபதி மரபின் முதல் ஆளாகிய சடைக்கன் என்னும் உடையான்
ரகுநாத சேதுபதி. அவருக்குப் பின்னர் அவருடைய வாரிசுகள் ஆட்சிக்கு
வந்தனர். திருமலை சேதுபதி காத்த தேவர் என்பவருக்குப் பின் அவருடைய
சகோதரர் மகனாகிய ராஜசூரியத் தேவர் ஆட்சிக்கு வந்தார். ஆறே மாதங்கள்
ஆட்சியில் இருந்தார். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் அந்த வட்டாரத்தில்
மிகப்பெரிய குழப்பங்கள் தொடர்ந்து நிலவின. ராஜசூரியத் தேவரின்
தம்பி பட்டத்துக்கு வந்தார். அவரும் மூன்றே மாதங்களில் மர்மமான
விதத்தில் இறந்துபோனார்.
பின்னர் இரண்டு ஆண்டுகள் சேதுநாடு எந்த அரசரும் இல்லாத
நிலைமையில் இருந்தது. யார் யாரோ ஆங்காங்கு உரிமைப் போட்டிகள்
நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.
1674-ஆம் ஆண்டில் கிழவன் சேதுபதி ஆட்சிக்கு வந்தார்.
அவர் பதவிக்கு வந்தபோது ரகுநாத சேதுபதி என்ற பெயரை
ஏற்றுக்கொண்டார்.
சேது காவலர்களாக இருந்தபடியால், ஆரம்பகால சேதுபதிகள்
ராமரின் வம்சமாகிய ரகு வம்சத்தின் பெயரைத் தங்களுக்கு வைத்துக்
கொண்டனர். ஆகவே ரகுநாத சேதுபதி என்னும் பெயர் ஓர் அபிஷேகப்
பெயராக விளங்கியிருக்கிறது.
பட்டத்துக்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் அவருடைய
வரலாறு என்னவென்பது தெரியவில்லை. பலரை ஒழித்துக்கட்டிவிட்டு
வந்திருக்கிறார்.
அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அவரை
ஆட்சிக்குக் கொண்டு வந்த அனைவரையும் தீர்த்துக்கட்டினார்.
ஆட்சிக்கு வரும்போது அவருக்கு வயது ஐம்பதுக்குமேல்
ஆகிவிட்டிருந்தது. 1710-ஆம் ஆண்டு வரைக்கும் அவர் ஆட்சியில்
இருந்தார்.
கிழவராகவே பட்டத்துக்கு வந்து ஆட்சியிலிருந்த முப்பத்தைந்து
ஆண்டுகளில் முதுபெரும் கிழவாரகவே அவர் விளங்கியதால் அவருக்குக்
'கிழவன்' என்பது ஒரு பட்டப்பெயராகவே போய்விட்டது.
பயங்கரத் தன்மை மிகுந்தவர். அனவருமே பயந்து இருந்தனர்.
எதிரிகளை ஒழித்துக் கட்டியவர்.
சிற்றரசர்களை ஒழித்தவர். சேதுநாட்டைப் பெரிதாக்கியவர்.
தொண்டைமான் புதுக்கோட்டையை உருவாக்கியவர். மதுரை
நாட்டிலிருந்து தன் நாட்டை பிரித்து சுதந்திரநாடாக ஆக்கிக்கொண்டவர்.
நவீன போர்முறைகளைக் கொண்டு டச்சுக்காரர்களைத்
தோற்கடித்தவர்.
முகவை ஊரணியைக் கட்டியவர் ராமநாதபுரம் என்னும்
பெயரில் வலுமிகுந்த கோட்டையை உடைய தலைநகரை ஏற்படுத்தியவர்.
ராமலிங்க விலாசம் என்னும் அழகிய அரண்மனையைக் கட்டியவர்.
வள்ளல் சீதைக்காதி மரைக்காயரை அமைச்சராகக் கொண்டவர்.
தம்முடைய தம்பியாகவும் வரித்துக் கொண்டு அவருக்கு 'பட்டத்துப்
பெரிய தம்பி மரைக்காயர்' என்ற சிறப்பு விருதையும் கொடுத்தவர்.
'சின்னத் தம்பி மரைக்காயர்' என்பவர் சீதைக்காதியின் தம்பி;
டச்சுக்காரர்களுடன் ஏற்பட்ட போரில் சேதுநாட்டுக் குதிரைப்படைக்குத்
தலைமை பூண்டு அந்தப் போரில் இறந்தவர்.
மதுரைக் கோட்டையை ஒரு சமயம் கைப்பற்றி மதுரைநாட்டுக்கே
சிலநாட்கள் கிழவன் அதிபதியாக இருந்தவர்.
தஞ்சையிலும் மதுரையிலும் இருந்த நாயக்க மன்னர்களில்
யார் ஆட்சியிலிருக்கவேண்டும் என்பதைக்கூட கிழவனே நிர்ணயிக்கும்
நிலைமை இருந்தது. கிழவன் அவர்களை விட்டுவைத்தால் அவர்கள்
பதவியில் இருக்கமுடிந்தது. ரஸ்டம் கான் என்னும் பயங்கரவாதத் தலைவன்
மதுரை நாட்டைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆண்டுவந்தபோது
அவனைக் கொன்று நாயக்கமன்னனை மீண்டும் அதிகாரத்துக்குக்
கொண்டுவந்த ஆள். நாயக்கனிடமிருந்து பரராஜகேசரி என்னும்
பழந்தமிழ் விருதைப் பெற்றவர்.
பட்டயங்களில்மட்டும் 'ரகுநாத தேவர்' என்ற பெயர் காணப்படும்.
அவருடைய பெயரை உச்சரிக்கவும் மக்கள் அஞ்சினர்.
ஆகையால்தான் கிழவன் என்ற பெயரால் அவரை மக்கள்
அவர்களுக்குள் குறிப்பிட்டனர்.-----Maya thevar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்