Posts

Showing posts from September, 2018

திருவாசகம்

Image
திருவாசகம் என்பது ஒரு தேனை போன்ற தன்மை பெற்றது. தேன் எந்த பொருளோடு சேருகிறதோ அதை தன்வயம் படுத்தி கொள்ளும். அது போன்று எவர் ஒருவர் திருவாசகம் பயில்கின்றாரோ அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை தன்வயம் படுத்தி கொள்வாரகள், அவர்களை எந்த ஒரு தீய வழிகளையும் நோக்கி செல்ல விடமாட்டார்கள்... திருவாசகத்திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.. அனைத்தும் வேத.. ஆகம... மந்திர...அற்புத எழுத்துக்கள்.. வார்த்தைகள்... சொற்கள்.... பொருள் உணர்ந்து தெளிந்தால் பேராணந்தமாகும்.... சிவாயநம.. வேதம் நான்கினும் மெய்பொருளாகும் நாதன் நாமம் நமசிவாய... நம் அனைவரையும் ஆளட்டும்... தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே — எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.. ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்... நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடும் மனமே சிவன் வருவார் அருள் தருவார் வாழ்வில் அனுதினமே... நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தா

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

Image
மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்  1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.  2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். 6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும். 7.அன்னையே சிலையாக இ

நாகலிங்கப்பூ

Image
*நாகலிங்கப்பூ விசேஷங்கள் நாகலிங்கப்பூ.* 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 *இதுவே கடவுள். இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான்.* *அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.* *நாகமுமிருக்கிறது …………..உள்ளே லிங்கமும் இருக்கிறது.* *சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.* *உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.* *ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும்.* *உள்ளம் அமைதி பெறும்.* கயிலாயம் கண்ணுக்குள் விரியும் சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.  பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .  விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக  வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகள

எட்டுக்குடி முருகன்

Image
எட்டுக்குடி முருகன் கோவில்!! நினைத்தப்படி காட்சி தரும் முருகன்... பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அதில் பல அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதேபோல தான் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளைக்கு அருகே அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் கோவிலில் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளது. தல வரலாறு : தெய்வீகச் சிற்பி என அழைக்கப்படும் ஸ்தபதி, பொரவாச்சேரி எனும் ஊரில் முருகனுக்கு சிலை எழுப்பினார். அச்சிலையின் அழகை கண்ட பரந்தச் சோழன் அந்தச் சிற்பியிடம் இனி இதுபோல் ஒரு முருகக் கடவுள் சிலையை நீ படைக்கக்கூடாது என உறுதி பெற்று கொண்டதாகவும், மேலும் ஸ்தபதியின் வலது கை பெருவிரலை வெட்டி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகு அந்த ஊரை விட்டு பக்கத்தில் இருந்த வேறு ஊருக்கு சென்ற சிற்பி, தெய்வீகம் தாங்கிய கல்லில் முருகன் அருளால் பெருவிரல் இன்றி அழகான சிலை வடிக்க, அதை முத்தரசன் எனும் மன்னன் பிரதிஷ்டை செய்ததே, இன்றைக்கு இருக்கக்கூடிய எட்டுக்குடி கோவில் ஆகும். தல சிறப்பு : எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும்

திருப்பதி

Image
🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு! 🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்... 🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. 🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் .. 🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . 🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். 🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. 🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. 🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடைய

தெருநாய்

Image
*💐தெருநாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு💐* “நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. *நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:* “எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் க

வேளம்

Image
#சொல்லும்_பொருளும்    "வேளம்..." சோழர்காலக் கல்வெட்டுகளில், இச்சொல் சாதாரணமாகவே தென்படும். பெரும்பாலும் நிவந்தக் கல்வெட்டுகளில் காணமுடியும். வேளம் என்பதற்கான பொருள், போகத்திற்காக பகைவர் நாட்டில் இருந்து கொண்டு வந்த, பொதுமகளிர் வாழும் இடம் எனத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு வந்தது  சில ஆய்வாளர்களால். பகைவர் நாட்டை வென்றபின், ஆநிரை கவர்தலும், பெண் கவர்தலும், வீரத்திற்குரிய மரபாகவே கருதப்பட்டதால், வேளம் என்ற இச்சொல்லுக்கான பொருள்  இவ்வாறாகத் தோன்றியது போலும். இருக்கட்டும். இதை விளக்கும் முன் தஞ்சைப் பெருகரில் இருந்த  வேளங்களின் பெயர்களை, கல்வெட்டுகள் காட்டுவதை சற்று பார்ப்போம். பாண்டி வேளம். உய்யங்கொண்டான் வேளம். அருமொழி தேவத் தெரிந்த வேளம். பஞ்சவன் மகாதேவியார் வேளம். உத்தமசீலியார் வேளம். உடையார் கோதண்ட வேளம். சளுக்கியகுலக் காலத் தெரிந்த வேளம். மேற்கண்ட பெயர்களை சற்று அவதானித்தால் தெரியும்,  இவை எல்லாமே அரசர், அரசிகளின் பெயர்கள் என்று. போகத்திற்கான மகளிர் வசிக்கும் இடம் வேளம் என்றால், இப்பெயர்களை வைக்க வாய்ப்பே இல்லை. மகளிர் இருப்பி

கீழத்தூவல்

Image
1957.... 14 ந்தேதி கலை 6 .30 மணி அளவில் கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் ரே அவனின் போலீஸ் படையுடன் வந்த போது இனம்புரியாமல் போலீஸ்க்கு பயந்து போய் கண்மாய் கரையில் உள்ள புளியமரத்தில் உச்சிக்கு சென்று அமர்ந்தார் கோவிந்தன் அப்போதைய அவருக்கு வயது 13 .....!!!!??? போலீஸ் வளையத்துக்கு இருந்த ஊர் பெண்கள் அனைவரும் பள்ளி காமோன்ட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள்  பொதுமக்களில் ஐந்து நபர்களை போலீஸ் அழைத்துக்கொண்டு வருவதை பார்த்த இச்சிறுவன் அச்சத்தில் உறைந்து போய் மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டே மரத்துக்கு கீழ் கண்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனேன் சிறுவன். 6 தோட்டாக்கள் சத்தம் டுமில் .....டுமில் ....என்று சத்தம்  ஊரோ நிஷப்த்தம்  ஒரே அமைதி......????? ஐந்து பேர் உடல்களை 10 பேர் போலீஸ்காரர் துப்பாக்கியுடன் காவல் காத்தது... பள்ளிகூட்டம் காமொன்ட்டுக்குள் உள்ள பெண்களை துப்பாக்கி முனையில் போலீஸ் காவல் காத்தது.... பொது இடத்தில் ஊர் பொதுமக்களை உங்கார வைத்து  ரவுண்டப்பு செய்தது போலீஸ் துப்பாக்கியுடன்...... இன்ஸ்பெக்டர் ரே அவன் சில போலீஸ் படையுடன் மதுரையை நோக்கி ஜீப் பறந்தனர். கீழத்தூவல் மக்களை அனைவரையும் காலை

திராட்சை

Image
திராட்சை பழத்தின் நன்மைகள் கருப்பு, பச்சை, கருஞ்சிவப்பு என்று பல நிறங்களில் உள்ள பழம் திராட்சை. அவற்றில் எதில் அதிக நன்மை உள்ளது என்று பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன. குழந்தைகளுக்கு திராட்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதன் நிறம் குழந்தைகளை ஈர்ப்பதாலேயே. மேலும் திராட்சையை பலவாறு சாப்பிடலாம். அதில் ஜூஸ், ஜாம், ஜெல்லி, ஒயின், வினிகர் போன்றவை. சரி, தற்போது அந்த திராட்சையை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். * இதயத்தைப் பற்றி கவலை கொள்பவர்களாக இருந்தால், உடனே அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் ஒரு டம்ளர் ஒயினை சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், இதயத்தில்

"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி "

Image
"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி " இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான். பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80. சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று. 1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு - வலி நிவாரணி பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு 2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு 3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine ) பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல் 4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து ப

கரிகாலன்

Image
கரிகாலன் காலத்தில் ஆண்டிற்கு ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் காவிரிக்கரைகளில் வசிக்க முடியவில்லை!!!போர்களை எல்லாம் வெற்றிகரமாக முடித்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நினைத்த கரிகாலன் காவிரியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நினைத்தான்!!!காவிரிக்கரைகளை நேரில் கண்டு தீவிரமாக ஆராய்ந்தான்!!!காவிரியுடன் கொள்ளிடம் மீண்டும் இணையும் இடத்தில்கொள்ளிடப்படுகை காவிரிப்படுகையை விட தாழ்வாக இருப்பதைக்கண்டு அணை கட்ட அவ்விடத்தை தேர்ந்தெடுத்தான்!!!.கல்லணையை வெற்றிகரமாக கட்டி முடித்ததோடல்லாமல் ஆங்காங்கே வாய்க்கால்கள் வெட்டப்பட்டன!!!வாய்த்தலையில் உள்ள வாய்க்கால் அவன் காலத்தில் வெட்டப்பட்டது!!!காவிரியின் இரு புறமும் உயர்ந்த கரைகளை எழுப்பினான்!!!ட்ரபீசியம் போன்ற அமைப்பில் கரையின் அளவுகள் பின் வரும் பாடல் மூலம் தெரிய வரும்.:-----உச்சங்கோல் எண் கோல் உயரம் பதினாறு கோல்-----எச்சம் பிரிவாய் இருபது கோல்-தச்சளவு-----மண் கொள்ளக்கொண்ட கோல் என் கொல் வளவர் கோன்-----கண்கொள்ளக்கண்ட கரை-----பெருந்தொகை--2154 [ ஒரு கோல் என்பது 33 அங்குலம் ஆகும்]!!!தனது நுண்ணிய அறிவினால் கல்லணையை

சேரன்

Image
#சேரன் முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான், மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்: மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன் கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால். வஞ்சி அரசன் சேரன் கடலில் படையுடன் சென்று கடம்பர்களின் கடம்பு மரத்தை வெட்டினான். அவனைக் கடல் கடைந்த மாயவன் என்றே சொல்வர்...! இவ்வாறு மூவேந்தர்களை திருமாலுடன் ஒப்பிட்டு வாழ்த்தும் பகுதி அரிதானது -------------------------------------------------------------------- சேரன் சோழன் பாண்டியன் - #திருமால் ---------------------------------------------------------------- திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேன் என்பது போல மன்னர்களை திருமாலின் அம்சமாகவே கருதுவது மரபு ! அவனே செல்வத்திற்கும் நிலத்திற்கும் அதிபனாக இருப்பதால் திருமகள் மற்றும் நிலமகள் நாயகனின் அம்சமாக கருதுவர். தமிழரின் பழந்திணை தெய்வங்களுள் முக்கியமாவர் மாயோன் எனும் திருமால், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இந்த மாயோனை கொண்டாடுகின்றன. தமிழரின் முதன்மைக் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பகுதி ஆய்ச

சோழன்

Image
#சோழன் பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான், மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்: மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன் பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால்... புகார் அரசன் வளவன் இமயத்தில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். அவனைச் சக்கரப் படை கொண்ட திருமால் என்றே சொல்வர்...! ------------------------------------------------------------------------------------- சேரன் சோழன் பாண்டியன் - #திருமால் ------------------------------------------------------------------*- திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேன் என்பது போல மன்னர்களை திருமாலின் அம்சமாகவே கருதுவது மரபு ! அவனே செல்வத்திற்கும் நிலத்திற்கும் அதிபனாக இருப்பதால் திருமகள் மற்றும் நிலமகள் நாயகனின் அம்சமாக கருதுவர். தமிழரின் பழந்திணை தெய்வங்களுள் முக்கியமாவர் மாயோன் எனும் திருமால், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இந்த மாயோனை கொண்டாடுகின்றன. தமிழரின் முதன்மைக் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பகுதி ஆய்ச்சியர் குரவை, மதுரைக்கு சிலம்பு விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லன

பாண்டியன்

Image
#பாண்டியன் கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம், தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே: தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக் கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால். கோக்காத சந்தன மாலையும், கோத்த முத்து மாலையும் தேவர் கோன் இந்திரன் மாலையையும் தென்னவன் தன் மார்பில் சூடிக்கொண்டான். அவனை, குருந்த மரம் சாய்த்த கண்ணன் என்றே சொல்வர்...! ----------------------------------------------------------------------------------- சேரன் சோழன் பாண்டியன் - #திருமால் ------------------------------------------------------------ திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேன் என்பது போல மன்னர்களை திருமாலின் அம்சமாகவே கருதுவது மரபு ! அவனே செல்வத்திற்கும் நிலத்திற்கும் அதிபனாக இருப்பதால் திருமகள் மற்றும் நிலமகள் நாயகனின் அம்சமாக கருதுவர். தமிழரின் பழந்திணை தெய்வங்களுள் முக்கியமாவர் மாயோன் எனும் திருமால், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இந்த மாயோனை கொண்டாடுகின்றன. தமிழரின் முதன்மைக் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பகுதி ஆய்ச்சியர் குரவை, மது