கரிகாலன்

கரிகாலன் காலத்தில் ஆண்டிற்கு ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் காவிரிக்கரைகளில் வசிக்க முடியவில்லை!!!போர்களை எல்லாம் வெற்றிகரமாக முடித்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நினைத்த கரிகாலன் காவிரியின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நினைத்தான்!!!காவிரிக்கரைகளை நேரில் கண்டு தீவிரமாக ஆராய்ந்தான்!!!காவிரியுடன் கொள்ளிடம் மீண்டும் இணையும் இடத்தில்கொள்ளிடப்படுகை காவிரிப்படுகையை விட தாழ்வாக இருப்பதைக்கண்டு அணை கட்ட அவ்விடத்தை தேர்ந்தெடுத்தான்!!!.கல்லணையை வெற்றிகரமாக கட்டி முடித்ததோடல்லாமல் ஆங்காங்கே வாய்க்கால்கள் வெட்டப்பட்டன!!!வாய்த்தலையில் உள்ள வாய்க்கால் அவன் காலத்தில் வெட்டப்பட்டது!!!காவிரியின் இரு புறமும் உயர்ந்த கரைகளை எழுப்பினான்!!!ட்ரபீசியம் போன்ற அமைப்பில் கரையின் அளவுகள் பின் வரும் பாடல் மூலம் தெரிய வரும்.:-----உச்சங்கோல் எண் கோல் உயரம் பதினாறு கோல்-----எச்சம் பிரிவாய் இருபது கோல்-தச்சளவு-----மண் கொள்ளக்கொண்ட கோல் என் கொல் வளவர் கோன்-----கண்கொள்ளக்கண்ட கரை-----பெருந்தொகை--2154 [ ஒரு கோல் என்பது 33 அங்குலம் ஆகும்]!!!தனது நுண்ணிய அறிவினால் கல்லணையைக்கட்டிய கரிகாலன்" நுண்புனல் நாடன்"என்றும்"பொன்னி கரை கண்ட பூபதி",நாட்டின் வளம் பெருகியதால் "பெருவளத்தான்"எனவும் அழைக்கப்பட்டான்!!!வேளாண்மைக்கு உண்டான எல்லாவசதிகளுடன் வேளிர் குல குடும்பங்களையும் குடியமர்த்தினான்!!! பிற்காலப்புலவர்கள் சோழ நாட்டை "வளஞ்சேர் சோழமண்டலமே" எனப்பாடியுள்ளனர்!!!தஞ்சையில் ஆங்காங்கு நெற்குவியலுக்கு வித்திட்டவன் கரிகாலன்!!!

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்