எட்டுக்குடி முருகன்

எட்டுக்குடி முருகன் கோவில்!! நினைத்தப்படி காட்சி தரும் முருகன்...

பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அதில் பல அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதேபோல தான் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளைக்கு அருகே அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் கோவிலில் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளது.

தல வரலாறு :

தெய்வீகச் சிற்பி என அழைக்கப்படும் ஸ்தபதி, பொரவாச்சேரி எனும் ஊரில் முருகனுக்கு சிலை எழுப்பினார். அச்சிலையின் அழகை கண்ட பரந்தச் சோழன் அந்தச் சிற்பியிடம் இனி இதுபோல் ஒரு முருகக் கடவுள் சிலையை நீ படைக்கக்கூடாது என உறுதி பெற்று கொண்டதாகவும், மேலும் ஸ்தபதியின் வலது கை பெருவிரலை வெட்டி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு பிறகு அந்த ஊரை விட்டு பக்கத்தில் இருந்த வேறு ஊருக்கு சென்ற சிற்பி, தெய்வீகம் தாங்கிய கல்லில் முருகன் அருளால் பெருவிரல் இன்றி அழகான சிலை வடிக்க, அதை முத்தரசன் எனும் மன்னன் பிரதிஷ்டை செய்ததே, இன்றைக்கு இருக்கக்கூடிய எட்டுக்குடி கோவில் ஆகும்.

தல சிறப்பு :

எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் முருகப் பெருமானின் வாகனம் மயிலின் தலை வலது புறமாக இருக்கிறது.

முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்திற்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.

இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம்.

எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்