கீழத்தூவல்

1957.... 14 ந்தேதி கலை 6 .30 மணி அளவில் கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் ரே அவனின் போலீஸ் படையுடன் வந்த போது இனம்புரியாமல் போலீஸ்க்கு பயந்து போய் கண்மாய் கரையில் உள்ள புளியமரத்தில் உச்சிக்கு சென்று அமர்ந்தார் கோவிந்தன் அப்போதைய அவருக்கு வயது 13 .....!!!!???

போலீஸ் வளையத்துக்கு இருந்த ஊர் பெண்கள் அனைவரும் பள்ளி காமோன்ட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள்  பொதுமக்களில் ஐந்து நபர்களை போலீஸ் அழைத்துக்கொண்டு வருவதை பார்த்த இச்சிறுவன் அச்சத்தில் உறைந்து போய் மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டே மரத்துக்கு கீழ் கண்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனேன் சிறுவன்.
6 தோட்டாக்கள் சத்தம் டுமில் .....டுமில் ....என்று சத்தம்  ஊரோ நிஷப்த்தம்  ஒரே அமைதி......?????

ஐந்து பேர் உடல்களை 10 பேர் போலீஸ்காரர் துப்பாக்கியுடன் காவல் காத்தது...

பள்ளிகூட்டம் காமொன்ட்டுக்குள் உள்ள பெண்களை துப்பாக்கி முனையில் போலீஸ் காவல் காத்தது....

பொது இடத்தில் ஊர் பொதுமக்களை உங்கார வைத்து  ரவுண்டப்பு செய்தது போலீஸ் துப்பாக்கியுடன்......

இன்ஸ்பெக்டர் ரே அவன் சில போலீஸ் படையுடன் மதுரையை நோக்கி ஜீப் பறந்தனர்.

கீழத்தூவல் மக்களை அனைவரையும் காலை முதல் மாலை வரை பசியும் பட்டினிமாய் போலீஸ் காவல் காத்தார்கள்.

மாலையில் மீண்டும் ஒரு போலீஸ் படை வந்தது ஐந்து பேர் உடல்களை ஒரு ஜீப்புக்குள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி போட்டுக்கொண்டு போலீஸ் ஜீப் பறந்தனர்...

காலையில் மரம்மேரிய சிறுவன் பசியால் புளியமரத்தின் இலையை பறித்துத்தின்றும் ஒன்னுக்கு வரும்போது கீழே விழாமல் மரக்கிளையில்  விட்டுக்கொண்டும் மாலை வரை பசியும் பட்டிமாய் மரத்தில் இருந்து இரங்கி ஊரை நோக்கி நடந்தார்.....

ஊர் மக்களிடம் மயங்கி நிலையில் இருந்து கீழே விழுந்தார் ஊர் உறவினர்கள் அனைவரும் கூடி முகத்தில் தண்ணீர் அடித்து முகம் கழுவச்சொல்லி குடிக்க தண்ணீர் கொடுத்து துடைத்து விட்டு குடிக்க அவர் வீட்டில் இருந்து பால் எடுத்து வந்தார் அவருடைய தாயார்.

நடந்ததை  அனைத்தையும் விபரமாக ஊர் மக்களிடம் எடுத்துச் சொன்னார்..

அப்போது எந்த செய்தியும் பேப்பரில் போடவில்லை...!!!???

மாறாக தின மணி  கோயங்கா பத்திரிக்கை மட்டும் காமராஜர் நாடார் ஆட்சியை தோல் உரித்து காட்டியது...முன் கூட்டியே மதுரை யில் இருந்து வெளிவந்த செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிகள் மோதல் வரப்போகிறது இன மோதல்நடைபெற போகிறது சட்டம் சரி இல்லை என்று தின மணி மட்டும் செதிகள் வந்தவன்னம் இருந்தது....

இது அப்போதைய முதல்வர் காமராஜர் நாடார் கட்டளைக்கு இனைங்கி காங்கிரஸ்காரர்கள் பெரும் கூட்டமாக பத்திரிக்கை அலுவலகம் மீது பெட்ரோல் ஊத்தி கொழுத்த வந்தார்கள் நிர்வாகம் பொறுப்பாக  பதில் சொன்னது பத்திரிகை அலுவலகம் இழுத்து மூடப்பட்டது...

(10 நாட்கள் கழித்து மதுரை எடிசன் ஆந்திரமாநிலம் சித்தூரில் இருந்து  வழக்கம்போல் பத்திரிகை  மதுரை,இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்ட செதிகளை தினமணி நாளிதழில் உண்மை செய்திகளை தந்தவன்னம் இருந்து இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்று கட்டம் கட்டி தினமணி மட்டும் போட்டு இருந்தது  குறிப்பிடத்தக்கது) 

என்ன செய்தார்கள் இந்த மக்கள் ஏன் இந்த துப்பாக்கி சூடு நடத்தியதில் என்ன லாபம் இந்த சர்க்காருக்கு இந்திய முழுவதும் கேள்விகள் கேட்க பட்டது ...

கீழத்தூவல் பொது மக்களுக்காக பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்சை அருவா வேல் கம்பு கொண்டு போலீஸ்சை தாக்க வந்தார்கள் தற்காப்புக்காக சுட்டதில் ஐந்து மறவர்கள் மாண்டு போனார்கள் என்று சொல்லி காமராஜர் நாடார் சர்கார் அப்போதைய அமைச்சர்  சி.சுப்பிரமணியம் சட்டசபையில் சட்டந்தை மூடினார்கள்.....

இன்றும் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இப்போது கேட்டாலும் இந்த மாமா கோவிந்தத்தோவர் ஒரு நடுக்கத்துடன் பதில் சொல்லும்போது எவர் கண்களில் மல்காமல் இருக்காது.

இன்று இந்த மாமாவின் நிலைமை கொஞ்சம் காது கேலாமை வாய் தடுமாறி பேசும் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்......

ஏற்கனவே கண்மாய் கரையில் தத்தார் கமிஷன் முன்பு துப்பாக்கி சூடுவதை நடித்து காட்டிய கோவிந்தன்/////....வயது 13.....இன்று கோவிந்தத்தோவர் வயது 74

சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் சர்கார் ஒரு கமிஷன் அமைத்து...!!!???

(அதுதான் தத்தார் கமிஷன்)

அதுபற்றி மீண்டும் பதிவு செய்கிறேன்.....

நட்புடன்......க.பூபதி ராஜா

Comments

  1. It’s exhausting to find knowledgeable people on this matter, but you sound like you understand what you’re talking about! Thanks casino bonus

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்