Posts

Showing posts from July, 2019

தமிழரின்_சிந்துநதி_ஆதாரம்

Image
#பாகிஸ்தான் பாதுகாத்து வைத்து இருந்த #தமிழரின்_சிந்துநதி_ஆதாரம் சிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டு களுக்கு முந்தைய #தமிழ்செப்பேடு அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன. சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டு “ரிக்கு வில்லிசு” என்பவரின் பார்வைக்கு வந்தன. XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 - கி.மு 2000 (4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது. இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம் நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம். செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :- " கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்

விஜயாலய சோழீஸ்வரம்

Image
விஜயாலய சோழீஸ்வரம்------நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின் பெயர்கள் மேல மலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோவில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப் படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்

நீர் மேலாண்மை

Image
*நீர் மேலாண்மையில்* *எப்பேர்ப்பட்ட அறிவாற்றல் படைத்தவர்கள்  தமிழர்கள்* ! ( *தயவு*00 *செய்து* *இந்த* *கட்டுரையை* *அணைவருக்கும்* *share* *செய்யுங்கள்* ) ----------------------------------------------------- *பழந்தமிழர்களின் நீர்மேலாண்மை* ----------------------------------------------------- தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய *நீர் சமூகம்* ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை! பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை! அதற்கு நிறைய *தொழில்நுட்பம்* தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்! ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற

நார்த்தாமலை

Image
நார்த்தாமலை இன்று உள்ளதுபோல் மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 'நானாதேசத்து ஐநூற்றுவர்' என்கிற வணிகர் குழுவிற்குத் தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது. ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ), பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. அதன்பிறகு சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நார்த்தாமலை சிறப்புப் பெற்று விளங்கியதற்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்துக் கற்றளிகளே சான்றுகள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (கி.பி 985-1014), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால்