அண்ணல் பேயத்தேவர்
அண்ணல் பேயத்தேவர் ========================= கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது. முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர். உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார். ...