இராசராச சோழன்
தஞ்சை பெரிய கோயிலைக்கட்டிய இராசராச சோழன்,விமானம் முழுவதும் தங்கத் தகடுகள் போர்த்தியதாக “ராஜராஜீஸ்வரமுடையார், ஸ்ரீவிமாநம் பொன் மேய் வித்தான்….” என்று தனது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கி.பி.,1310 மற்றும் 1318ல் முறையே அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் கபூராலும் குஸ்ரூகானாலும் பெரிய கோயிலின் செல்வங்கள் யாவும் கொள்ளை அடிக்கப்பட்டன. பெருவுடையார் கோயிலில். ராஜராஜசோழன் தன் கல்வெட்டு ஒன்றில் “தாய்மண் காக்க உதிரம்கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலங்களை கொடையை அளித்துள்ளதை பொறித்து வைத்துள்ளார்.. மேலும்,போருக்குச்சென்ற தன்னுடைய படைத்தளபதிகள் உறுப்புகள் எவ்வித ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டுமென்று தஞ்சை பெருவுடையாரை (சிவனை)வேண்டி நிவந்தங்கள் விட்டுள்ள செய்திகளும் பெரியகோயில் கல்வெட்டுக்களில் உள்ளன.
Comments
Post a Comment