Skip to main content

பசும்பொன் தேவர்

"பசும்பொன் தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் உட்பட அனுபவித்தார்கள்"

"சிசுபாலனை வதம் செய்வது போல் தேவரை வதம் செய்வோம்" என்று பேசிய பக்தவத்சலம் படுதோல்வி அடைந்தார். இனக்லவரத் தீயை மூட்டி விட்டு முதுகுளத்தூரில் குளிர்காய நினைத்த காமராஜரும், கக்கனும், பெ.சீனிவாசன், ஓ.பி.ராமன் என்ற இளம்பிள்ளைகளால் தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

விவசாய உற்பத்தி பண்ணுகிற பொருளுக்கு விலை வைக்கிற உரிமை விவசாயிக்கு வேண்டும். பங்குனி சித்தரை மாத வெயிலிலே முதுகெல்லாம் உப்புபரிய பருத்தியை ஏடுப்பது நம்முடைய தாய்மார்கள். அந்தப் பருத்திக்கு பொதி ஒன்றுக்கு இன்னதென்று விலை வைப்பவன் விருதுநகர் வியாபாரி.

இந்த அநியாயம் ஒழிய வேண்டாமா? என்று 1957 தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் பேசியது எந்த அளவுக்கு காமராஜருக்கும் அவரது உறவினர்களுக்கும் கோபத்தை மூட்டியது என்பதுதான் மூட்டிவிடப்பட்ட முதுகுளத்தூர் கலவரம். அந்த கலவரத்தின் மூலம் தேவரையும் தேவரைப் பின்பற்றும் மக்களையும் அழிக்க அன்றைய காங்கிரஸ் ஆட்சி செய்த அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அடக்கு முறைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் நாட்டையே சுடுகாடாக்கிய கோரத்தாண்டவங்கள் இவைகளுக்கு எல்லாம் பழிதீர்த்துக் கொண்டனர் தேவருடைய திருத்தெண்டர்கள்.

நைஷ்டீக பிருமச்சாரியான தேவரது உடல் நலம் குன்றியதே தேவர் புதுக்கோட்டை சிறையில் இருந்த போது அவருக்கு காங்கிரஸ் கட்சி செய்த வஞ்சக சதி திட்டத்தின் விளைவுதான் என்பதைத் துணிந்து சொல்கிறார் ஏ.ஆர்.பெருமாள்.

எப்படியும் தேவருடைய அரசியலையும், புகழையும் அழித்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தேவர் மீதும் தேவரை பின்பற்று மக்கள் மீதும் பாய்ந்தது.

காங்கிரசார் செய்கிற லஞ்ச லாவண்யங்களை கண்டித்தார். கள்ள மார்க்கெட் செய்யும் காங்கிரஸ்காரர்களை கடுமையாகச் சாடினார். கோட்டா, பெர்மிட், லைசென்ஸ் என்று நாட்டையே சூறை ஆடும் ஒரு கொள்ளைக் கூட்டமாக காங்கிரஸ் மாறி விட்டதை நாட்டு மக்கள் உணரும்படியாகப் பேசினார். கள்ளநோட்டு அடிக்கிற கும்பலுடன் கூட முதல் மந்திரி காமராஜர் தொடர்பு என்று பேசினார்.

தேவரின் இத்தகைய பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் காமராஜருக்கும் கோபத்தை உண்டாக்கியது. அதன் விளைவாகத்தான் மேலே சொன்ன இத்தனை அநியாயங்களும் நடந்தன.

தேவருக்கு காங்கிரஸ் கட்சி செய்த தீமைக்குத் தண்டனை தான். ஆட்சியை பறி கொடுத்து விட்டு பல ஆண்டுகள் கோட்டைக்குள்ளே நுழைய முடியாமல் பொட்டலிலே நின்று கூப்பாடு பொடுகிறது.

தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் அனுபவித்தார். 1967-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டு வீதயிலே நின்றார். அப்புறம் கோட்டைப் பக்கம் தலைவைத்துக் கூட காமராஜரால் படுக்க முடியவில்லை. காங்கிரசின் சரித்திரம் 1967-ம் ஆண்டு முடிந்தது.

Comments

Popular posts from this blog

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ