சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்


***சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்***

கிபி1279ல் சோழர்கள் ஆட்சி முற்றிலுமாக அழிந்துவிட்டாக பலரும் கருதுகின்றனர்.

ஆனால் கிபி1471 முதல் 1496வரை சோழர்களின் வழித்தோன்றல் காடவராயர் பட்டம் தாங்கிய கோனேரிராயன் என்ற மன்னர் தஞ்சை,புதுக்கோட்டை,ஆற்காடு பகுதிகளை உள்ளடக்கி ஆண்டு வந்தார்.

நரசம நாயக்க மன்னர் கோனேரிராயனை சோழன் என்றே தனது கல்வெட்டுகளில் குறித்துள்ளார்.

சரி இதற்கும் கள்ளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்,

தஞ்சையில் முதன் முதலாக நாயக்கர் மன்னர் கிபி1532ல் தஞ்சை மன்னராக முடிசூட்டிக்கொள்கிறார்.

அதாவது கோனேரிராயன் இறந்து சுமார் 36வருடங்கள் கழித்து சேவப்ப நாயக்கர் தஞ்சை மன்னராக முடி சூட்டிக்கொள்கிறார்.

இதனை நாயக்கர் வரலாற்று ஆய்வாளர் திரு.குருகந்தி சீத்தாராமைய்யா அவர்கள்

தஞ்சை மண்டலத்தை நாயக்கர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு தஞ்சையில் சோழர்களின் வழித்தோண்றலாகிய கள்ளர் பெருங்குடிகள் தஞ்சையில் பல இடங்களில் சிற்றசர்களாகவும்,குறு நில மன்னராகவும் சுருங்கிவிட்டனர் என்று கூறுகிறார்.

அவர் எழுதிய புத்தகத்தில் கள்ளர்களே சோழர்கள் என்றும் கூறுகிறார்.

இவரின் கூற்றும்,காடவராயர் பட்டம் கொண்ட கோனேரிராயன் மறைவுக்கு பிறகு அவருடைய ஆட்சி பகுதிகள் சிதறி இருந்த நேரத்தில் தஞ்சையை சேவப்ப நாயக்கர் கைப்பற்றி உள்ளார் என்றே கருதுப்படுகிறது.

தஞ்சையை சேவப்ப நாயக்கர் கைப்பற்றினாலும் சோழ வழித்தோன்றல்களாகிய கள்ளர்கள் தன்னரசாகவே வாழ்ந்துள்ளனர்.

திருச்சி விசங்கு நாட்டு கள்ளர்களிடம் வரி கேட்டு வந்த நாயக்க படைகளை, கள்ளர்கள்  அவர்களின் தலைகளை வெட்டி சாய்கின்றனர்.

மேலும் 16ஆம் நூற்றாண்டில் அச்சம்பேட்டை என்ற இடத்தில் தன்னரசு கள்ளர் நாடு இருந்ததாக பிரிட்டீஸ் ஆவணங்கள் குறிப்பிடுகிறது.

ஆனால் இப்போது அது தஞ்சையில் எந்த பகுதியில் உள்ளது என்பதை கூட கண்டறிய முடியவில்லை

இறுதிவரை தன்னரசாக சோழர் வழித்தோன்றல் கள்ளர்கள் தஞ்சையில் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை.

தெற்காசியா வரை கால் பதித்த புலிக்கொடி பறக்க விட்ட கள்ளர்குல சோழர்கள்,

காலப்போக்கில் பாண்டியர்களுடன் ஏற்றப்பட்ட தோல்வி, விஜய நகர பேரரசின் எழுச்சி போண்றவற்றால் பேரரசில் இருந்து சிற்றரசு,குறுநில மன்னர்,ஜமீன்,நிலக்கிழார் என சுருங்கிவிட்டனர் என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

குறிப்பு: இன்றும் தஞ்சையில் காடவராயர்,சோழகர் பட்டம் தாங்கிய கள்ளர்கள் இன்றும் வாழ்கின்றனர்

நன்றி
Tanjapurapandhra Nayakaraja Charitramu Kuruganti Seetaramaiah M.A (1932)
கோனேரிராயன் என்னும் தமிழ் மன்னன் by உயர்திரு அய்யா குடவாயில் பாலசுப்பிரமணியன்(முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர்)
மற்றும்
கார்த்திக் காளிங்கராயர்

அன்புடன்
 சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்