வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!

வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!

உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக அளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.

அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்களுக்கு செவிட்டுத்தன்மை ஏற்படுவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்