Posts

Showing posts from January, 2018

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

Image
வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது. இதில் உள்ளவர்கள் அனைவரும் பெருமைக்குரியவர்களே. நிற்பவர்கள் இடமிருந்து வலம் : * எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார், * திருமையம் சித்தியமூர்த்தி அய்யர், * சென்னை குருசாமி முதலியார், * மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் : * சேலம் வரதராஜ நாயுடு, * வ.உ.சிதம்பரம் பிள்ள, * பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் : * விருதுநகர் முத்துசாமி ஆசாரி, * மன்டையம் சீனிவாச ஐயங்கார், *  காமராசர்.

தை_பூசம்

Image
#தை_பூசம்!!! தமிழ் கடவுளான முருகன் அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி கையிலேந்திய நாளாக இந்த தைப்பூசம் கருதப்படுகின்றது. இந்நாள் இருபத்தியேழு நட்சத்திர மண்டலத்தில் எட்டாவது நட்சத்திரமான பூச நட்சத்திரம் தை மாதத்தில் வரும்போது சிறப்பாக கொண்டாடபடுகின்றது. அனேகமாக இந்நாள் பௌர்ணமி நாளாகவே இருக்கும். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது.காலை பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகரராசியில் இருக்க, சக்தியின் அம்சமான சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் ஆட்சிபெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபக்கமும் நேர்கோட்டில் நிற்க, தை பூச திருநாள் அமைகின்றது. இச்சிறப்புமிக்க இத்தினம் இவ்வருடம் தை மாதம் பதினெட்டாம் நாள், அதாவது 31ம் திகதி ஜனவரி மாதம் 2018ம் ஆண்டு அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இந்நாளிலே புண்ணிய நதிகளில் நீராடுதல் சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைவுறுத்தி, நீராடுதல் வேண்டும். இந்நாளில் பல்வேறு லட்சியங்களை தொடங்குதல் சிறப்பு. இந்நாளில் தொட்டது எல்லாம் துலங்கும் என்பது பழமொழி. பூமியின் சிருஷ்டி ஆரம்பித்த நாள் இதுவே ஆகும். அத

தைப்பூச சிறப்பு

Image
தைப்பூச சிறப்பு பதிவு ...! பழனி முருகன் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு , சேரமான் பெருமான் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது ... பழநி கோவில் தலத்தில் தான் . முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது 🌾 ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் . தமிழக கோயில்களில் , அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை தரும் முதல் கோயில் 🌾 சேர , பாண்டிய மன்னர்கள் போற்றிய திருத்தலம் . முருகனை அன்போடு நினைப்பவருக்கு . ஆராத முக்தி தரும் தலம் , பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது , மிக்க அழகுடைய தங்கத் தேர் , தங்க மயில் வாகனம் உள்ள தலம் . தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினமும் தங்கதேர் இழுப்பது இங்கு தான் 🙏

கள்ளர் குல தொண்டைமான்கள்

Image
கள்ளர் குல தொண்டைமான்கள் ============================= இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ச்சியாக பழந்தமிழ்நாட்டை நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள் தொண்டைமான் அரச குலத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சிறப்புடன் விளங்கியவர்கள் 1) தொண்டைமான் இளந்திரையன் 2) வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான் 3) அறந்தாங்கி தொண்டைமான் 4) புதுக்கோட்டை தொண்டைமான் 5) குளத்தூர் தொண்டைமான் 6) திருநெல்வேலி தொண்டைமான் தொண்டைமான் இளந்திரையன் : ********************************************* காஞ்சி பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளங்கிற்று அந்தநாட்டில் வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர் (அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களையுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது). கரிகாலன் காலத்திற்குப் பிறகு, அந்நாடு, தொண்டையர் என்பார் ஆளுகைக்கு உட்பட்டதால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது; திரையன் என்பானொ

சிவந்தெழுந்த பல்லவரையர்

Image
தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்த கள்ளர் குலத்தின்  ஒரு பிரிவினரான தொண்டைமான் மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழநாட்டிற்கு இடம் பெயர்தல்: ============================================================================================ சிவந்தெழுந்த பல்லவரையர் *************************************** பாண்டிய மன்னன் உக்கிர வீர பாண்டியனால் ஏழு வருடம் காத்திருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்ட வெங்கடாசல பல்லவராயர் தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறினார். அவரோடு தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவரும், தொண்டை மண்டலத்தில் இருந்து இடம்பெயர்ந்து அம்புநாட்டில் குடியேறினார். அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லவராயரின் ஒரு குழுவினர் வைத்தூரில் குடியமர்ந்தனர். பல்லவராயன், காடவராயன், காடுவெட்டி ஆகிய கள்ளர் குழுக்கள் இன்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வாழ்கின்றனர். (Manual of pudukkottai state 1920, P 732)( சிவந்தெழுந்த பல்லவராயன் உலா) ( புதுக்கோட்டை சமஸ்தான செப்பேடு/ General history of pudukkottai state 1916 p 98) அறந்தாங்கி தொண்டைமான் **************************************** அறந

ஈசநாட்டுக்கள்ளர்

Image
ஈசநாட்டுக்கள்ளர் =================== ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர். இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக கள்ளப்பற்றும் & கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஆதாரமாக கள்ளர் பட்டங்களும் மற்றும் இங்கே உள்ள எல்லா பாளையக்காரர்களும் கள்ளர்களே. இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர். ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் - தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), சோழங்கதேவர் , இராசாளியார், பல்லவராயர், மழவராயர், நாட்டார், வன்னியர், அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், முத்தரையர், ஒண்டிப்புலியார், கடாரம்கொண்டார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்க

களவர் – கள்வர்

Image
தமிழ் அகராதியில் கள்வன் /கள்ளன் / கல்லன் ================================== நம் இனம் பாலை நிலத்தில் தோன்றியவர்களாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதாக கூறிகிறார்கள். ஆனால் பாலை என்பது தனி நிலம் அல்ல.  இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை நிலம் கோடை காலத்தில் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம் தமிழ்நாட்டு நிலம் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. குறிஞ்சியில் மக்கள் உழவில்லா வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். இதனால் தான் முல்லை நிலத்தினை அடிப்படையாக கொண்டு கள்ளர்கள் "காட்டுப்படை" என்று சிலர் எழுதுவதை காணமுடிகிறது. முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்

ஆரியப்படை_கடந்த #பாண்டியன்நெடுஞ்செழியன்

Image
#ஆரியப்படை_கடந்த #பாண்டியன்நெடுஞ்செழியன் : #கடைச்சங்ககால #பாண்டியர்களில் ஒருவரான இவர்  மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்.  தமிழகத்தை கைப்பற்ற வந்த ஆரியரை போரில் வென்று அடித்து துறத்தியதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். சேர, சோழர்கள் என பலரையும் வென்றவன், சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவன்.  கல்வியின் பெருமையை புறநானூற்றில் பாடலாக பாடி வரலாற்றுப் புகழ் பெற்றான். கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய உத்தரவிட்ட நெடுஞ்செழியன், கண்ணகியின் விளக்கம் கேட்டு தான் நீதி தவறியதை உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தன் உயிரை விட்டான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றாா்கள் மதுரை பாண்டிகோவிலில் கடவுளாக இருப்பது இவர்தான் என்றும் செவி வழிச்செய்தி உள்ளது.

காவிரி நதி நீர்

Image
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற நீர்த்தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கென இந்தியப்பாராளு மன்றத்தில் 1956 ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.1997 ல் இந்திய அரசு காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது.கர்நாடக அரசு அதை எதிர்க்கவே காவிரி ஆணையத்துடன் காவிரிக் கண்காணிப்புக் குழு வையும் அமைத்தது.புள்ளி விவரங்கள் சேகரித்து ஆணையத்துக்கு வழங்கி ஆணையம் இடும் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குழுவின் வேலையாகும்.காவிரி நதி நீர் தகராறு நடுவர் மன்றம் 1990 ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் தன் இறுதித்தீர்ப்பை 2007 பிப்ரவரி மாதம் வெளியிட்டது தமிழ் நாடு கேட்டிருந்த 566 டி எம் சி தண்ணீருக்குப்பதிலாக 419 டி எம் சி தண்னீர் விடச்சொல்லி தீர்ப்பு.அதையே ஒழுங்காக கர் நாடக அரசு தரவில்லை.தஞ்சாவூர் டெல்டா வாழ் மக்களின் வளமும், நலமும் காவிரி நீர் வரவைப்பொறுத்தாகும்.கர்நாடக அரசு தடுத்தால் போராடியே தீர வேண்டும்.அதே போன்று மீதேன் திட்டத்தை தடுக்காவிடில் விளை நிலம் பாதிக்கும்.இந்த இரண்டு விஷயங்களை

சிவகங்கை_சீமை_உதயம்

Image
சிவகங்கை_சீமை_உதயம் 27.01.1730-ல் #மாமன்னர்_சசிவர்ணத்தேவரால்  சிவகங்கை சீமை தோற்றுவிக்கப்பட்டது. வீரம் விளைந்த சிவகங்கை சீமை உதயமாகி இன்று 288 ஆண்டுகள். சிவகங்கைச் சீமை போற்றுவோம்...!!! சிவகங்கைச் சீமை வரலாற்று சுருக்கம் 17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும்.  1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 2000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற

ஈசநாட்டுக்கள்ளர்

Image
ஈசநாட்டுக்கள்ளர் =================== ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர். இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக கள்ளப்பற்றும் & கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஆதாரமாக கள்ளர் பட்டங்களும் மற்றும் இங்கே உள்ள எல்லா பாளையக்காரர்களும் கள்ளர்களே. இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர். ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் - தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), சோழங்கதேவர் , இராசாளியார், பல்லவராயர், மழவராயர், நாட்டார், வன்னியர், அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், முத்தரையர், ஒண்டிப்புலியார், கடாரம்கொண்டார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்க

முக்குலத்தோர் படைபற்றுகள்

Image
சோழ -பாண்டிய நாடுகளின் எல்லையாக. விளங்கிய புதுக்கோட்டையில் இருந்த முக்குலத்தோர் படைபற்றுகள் கிபி 1600 வரை ---------------------------------------------------- ---------------------------------------- *சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையான தென் வெள்ளாறு, புதுக்கோட்டை யின் நடுவில் சென்று சோழ பாண்டிய நாடுகளின் எல்லையை பிரிக்கிறது. பாண்டிய நாட்டில் இருந்து சோழர் தலைநகரமான தஞ்சையை விரைவில்  அடைய புதுக்கோட்டை வழியாகவே செல்ல வேண்டும். இருநாட்டின் எல்லாயாக அமைந்த புதுக்கோட்டை மாறி மாறி சோழர் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டுள்ளதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாட்டு எல்லையை பாதுகாத்து, ஊடுருவல் மற்றும் போர் ஆகியவற்றை சந்திக்க,படைவீரர்களை எந்நேரமும் தயார் நிலையில் எல்லையில் வைத்திருக்க எண்ணிய பேரரசர்கள், வெள்ளாற்றை மையமாக கொண்டு படைபற்றுகளை அமைத்தனர். படைபற்றுகள் என்பது ( Millitary regiment/ millitary station) போர் வீரர்களின் குடியிருப்புகள் மற்றும் ஆயுதங்கள் அமைந்துள்ள பகுதியாகும். யானைபடை, குதிரைப்படை, காலாட்படை, வில்படை போன்ற பல்வேறு படையினர்க்கு எந்நேரமும் பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்தி

ஆறுதலை முருகன்

Image
முருகன் ஒரு விளக்கம்   (திரு. மா. குமரகுரு) விடியற்காலையில் பொன்னிறக் கதிரொளி வீசிக்கொண்டு, நீல நிறக் கடலின் மேல் தங்கக் கதிர்படிய கதிரவன் புறப்படுங் காட்சி, ஆறுமுகக் கடவுள் நீல மயில் மீதில் வேலேந்தி, மற்றப் படைகளேந்தி அஞ்சலெனப் பகர்ந்து கொண்டு வருவதுபோல் இருக்கின்றது. ஆதிகாலந்தொட்டே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்தது. பழந் தமிழர்கள் இறைவனை இயற்கை அழகு எல்லாவற்றிலும் கண்டனர். இறைவனை அழகன் என்ற அர்த்தமுள்ள சொல்லாலே அழைத்தார்கள். முருகன் என்றால் அழகன் என்றே பொருள். விரிவாகச் சொன்னால் முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம், மகிழ்ச்சி .. என்ற ஆறு தன்மைகளும் ஒருங்கேயுடையவன் என்பதாகும். முருகன் உயர்வானவன். ஆகவே அவனுக்கு உயர்ந்த இடங்களிலே வீடு அமைத்தார்கள். குறிஞ்சிக்கிழான் என்றுங் கூறுவர். பஞ்ச பூதங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகையால் அவனுக்கு ஆறு முகங்களை உருவகித்து, ஆறுமுகன் என்றுங் கூறுவர். முருகன் ஆறறிவு படைத்த மனிதன் வணங்குதற்குரிய தெய்வம் என்றுங்கொள்ளலாம். இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணை கொண்டு உலகைப்

அர ஹரோஹரா

Image
திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா'என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ ஹரா' என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்), 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' ... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்வது, 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' ... என்று உரிமையோடு முறையிடுவதாகும்.

திரு அருணகிரிநாத சுவாமிகள்

திரு அருணகிரிநாத சுவாமிகள் திருமுருகப்பெருமானை நோக்கி விண்ணப்பிக்கின்ற திருப்புகழ்ப் பாடல் உணர்த்தும் கருத்தும் நம் அனைவரின் சிந்தனைக்குரியது. திருமுருகனின் பக்தர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அத் திருப்புகழ்ப் பாடல் பின்வருமாறு:   'ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே     ஈசருடன் ஞானமொழிபேசும் முகம் ஒன்றே   கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே     குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே   மாறுபடு சூரரைவதைத்த முகம் ஒன்றே     வள்ளியை மணம்புணரவந்த முகம் ஒன்றே   ஆறுமுகம்ஆன பொருள் நீ அருளல் வேண்டும்     ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே. பாடல் 1328 - ஏறுமயில் ஏறி. மயில்வாகனன் என்று அன்புடன் அழைக்கப்பெறும் திருமுருகப்பெருமானுக்கும், குறிஞ்சி நிலப்பகுதியைச் சேர்ந்த மயிலுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது என்று தெரிகின்றது. சங்க இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் செழுமையையும் இயற்கை அழகினையும் பிரதிபலிக்கும் பறவையாக விளங்கிய மயில், திருமுருகனின் சிறப்பு வாகனமாகிய பின்னர், கருடனைப்போல் வானத்தில் அதிக

முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி

Image
முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி..................................காவடி எடுப்பதற்குரிய முறையை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்னாள், அதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமானிடத்தில் மிகுந்த வரங்களைப் பெற்ற இடும்பன், சூரனை அழித்த கந்தவேள் குமரனின் அடியோனாக வாழ அருள் புரிய வேண்டினான். "அவ்வாறே ஆகுக" என அருள் புரிந்தார் சிவபெருமான். இடும்பனுக்கு அருள் புரிந்த இடம் இடும்பாவனம் என தற்போது வழங்கப்படுகிறது. இது திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் இரயில் மார்க்கத்தில், கோவிலூர் அருகில் உள்ளது. சிவபெருமானின் அருள்பெற்ற அகத்தியர், இமய மலைச்சாரலில் இருந்த இரு மலைச் சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் மற்றொன்றை சக்தியாகவும் கொண்டு வழிபட்டதால், 'சிவகிரி - சக்திகிரி' என அழைக்கப்பட்டன. அந்த இரு சிகரங்களையும் தனது இருப்பிடமான பொதிகை மலைக்குக் கொண்டுவர விரும்பினார் அகதிய முனிவர். அதனைக் கொண்டுவர முருகனை வழிபட்டார். முருகன் திருவருளால் அந்த இரு சிகரங்களையும் கொண்டு வரும் ஆற்றலையும் பெற்று, கேதாரம் வரையில் கொண்டு வந்தவர், ஓய்வு எடுப்பதற்காக ஒரு வனத்தில

முருகின் தொன்மை

Image
மு வரதராசனார் எழுதிய" முருகின் தொன்மை" என்ற நூலில் "குன்றுகள் தோறும் குடியிருப்பவன் குமரன்"என்று 2000 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துரைக்கிறார்..........முருகப்பெருமான் குன்று இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பார் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். அது பொய் அல்ல மெய் என்பதை நாம் இன்று இருக்கும் முருகப்பெருமான் திருத்தலங்களை வைத்து அறியலாம். ஆறுபடை வீடுகளில் முருகன் உறைவதாக நாம் அறிகிறோம். அவையாவன திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை என்பவை. இந்த ஆறு தலங்களும் குன்றின் மீதே அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் ஒரு குடைவரைத் தலம் ஆகும். இங்கு முருகன் குன்றின் மீது உள்ளார். பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, சோலைமலை ஆகிய தலங்களை நாம் நேரடியாக மலை மீது இருப்பதாகக் காணலாம். ஆனால் திருச்செந்தூர் கோவில் கடல் கரையில் இருப்பதாக அறிகிறோம். ஆனால் உண்மையில் இந்த கோவில் கடற்கரையோரமாக உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. செந்தூர் கோவிலில் உள்ள திருமால் பள்ளிகொண்டிருக்கும் இடத்தில் நாம் சந்தன மலையைக் காணல

தைப்பூசம்

Image
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின

வேதங்களும் தண்டாயுதபாணியின் பெருமையும்

Image
வேதங்களும் தண்டாயுதபாணியின் பெருமையும் பரமேச்வரனிடமிருந்து முதலாவதாகத் தோன்றியது சுப்ரமண்யமே. 'யாதே ருத்ர சிவா தனூ :' என்கிறது ருத்ர மந்திரம். ஆறெழுத்து சுப்ரமண்ய மந்திரத்தை கண்டுபிடித்த காரணத்தினால் ஸனத் குமரர் அம் மந்திரத்தின் ரிஷியாகக் கூறப்படுகிறார். முருகன் பிரும்மமானதினால்தான் வேத மாதாவே அவனைப் பற்றி எதுவும் கூறாமல் 'சுப்பிரமண்யோம்' என்று மும்முறை கூறுவதுடன் நிறுத்தி விடுகிறாள்.       'நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே' ... என்று ருத்திரத்தில் வருகிறது. 'உள்ளும் புறமுள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்று இதன் பொருள். இது முருகனையே குறிக்கும் என்று கொள்ளலாம். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன் கீதையில் 'படைத்தலைவர்களில் கந்தனாக விளங்குகிறேன்' என்கிறார். ராமாயணத்தில் வால்மீகி பால காண்டத்தில் விசுவாமித்திரர் வாயிலாக கந்தனின் அவதாரப் பெருமையை வெளியிடுகிறார்.       குமார சம்பவஸ் சைவ          தன்ய: புண்யஸ்த தைலச       பக்தஸ்சய: கார்த்திகேயே          காகுஸ்த புவிமானவ:       ஆயுஷ்மான் புத்ர பெளத்ரஸ் ச          ஸ்கந்த ஸா

டாக்டர் கால்டுவெல்

டாக்டர் கால்டுவெல் எழுதியுள்ளதாவது:- கள்ளர்..சோழர். மறவர்..பாண்டியர். அகப்படையார்(அகமுடையார்)..சேரர்.  மூவரும் ஒரே குடி வழியினர். (ஒரே குடும்ப வழியினர்) . ஒரு தாய் வயிற்று மக்கள். மூவரும் தமிழகத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து தத்தம் பெயரிலேயே நாடாண்டனர்.                                --டாக்டர் கால்டுவெல்.அயர்லாந்த் நாட்டு வரலாற்றறிஞர்

திருவாரூர் தியாகராஜர் கோயில்

Image
திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகபெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். . இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். தல சிறப்புக்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவி