பசும்பொன்

"பசும்பொன் தேவர் திருமகன் இல்லத்தில் எந்நேரமும் அன்னதானம் நடைபெறும்"

பசும்பொன் தேவர் திருமகன் பசும்பொன்னில் இருந்தாலும் புளிச்சிகுளம் எஸ்டேட்டில் இருந்தாலும் தினமும் அவருடன் குறைந்தபட்சம் ஐம்பது பேர் உணவு உண்பர்கள். ஒருநாள் கூட இரண்டொருவர் உடன் சாப்பிட யாருமே பார்த்திருக்க முடியாது.

புளிச்சிகுளம் எஸ்டேட்டில் கம்பு, கேழ்வரகு, வரகு ஆகியவை ஒருபுறம் சமையல் ஆகும். அரிசி சாதம் ஒருபுறம் சமையல் ஆகும். சமையலுக்கென்றே ஒரு வீடு தனியாக இருக்கும். அங்கு எந்நேரமும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். புளிச்சிகுளத்திற்கு தேவரைக் காணவும் வழக்குச் சொல்லவும் மற்றும் பல காரியங்களுக்கு வருகிறவர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றப்படி கம்பு, கேழ்வரகு, வரகு, அரிசி சோறு உண்பர். பசி என்று வருபவருக்கும் எந்நேரமும் உணவு கிடைக்கும். தேவரது புளிச்சிகுளம் எஸ்டேட் அன்னசத்திரம் போல எந்த நேரமும் விருந்து நடந்து கொண்டே இருக்கும்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்