களவர் – கள்வர்

தமிழ் அகராதியில் கள்வன் /கள்ளன் / கல்லன்
==================================

நம் இனம் பாலை நிலத்தில் தோன்றியவர்களாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதாக கூறிகிறார்கள். ஆனால் பாலை என்பது தனி நிலம் அல்ல.  இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை நிலம் கோடை காலத்தில் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்

தமிழ்நாட்டு நிலம் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது.

குறிஞ்சியில் மக்கள் உழவில்லா வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். இதனால் தான் முல்லை நிலத்தினை அடிப்படையாக கொண்டு கள்ளர்கள் "காட்டுப்படை" என்று சிலர் எழுதுவதை காணமுடிகிறது.

முல்லையிலேயே எளிய ஆட்சியமைப்பு முதலில் தோன்றிவிட்டது. அதாவது ஒரு சிறு கூட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றிவிட்டனர். முல்லை நிலம் என்பது ஆளுமைக் குடிகளின் தோற்றத்தைக் கொண்டது.

புறப்பொருள் வெண்பாமாலை ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்பதன் உண்மைப் பொருள், ‘கல் என்ற குறிஞ்சி வாழ்வு தோன்றி, மண் என்ற மருத, நெய்தல் வாழ்வு தோன்றாத காலத்தில் தோன்றியது’ என்பதாகும்.

குறிஞ்சிநிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும் கொண்டனர், இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்.

முல்லைநிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர்.; இதனாலேயே, திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.

முல்லைக்குரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது. “ மாயோன் மேய காடுறை உலகமும் “ என்பது நூற்பா,

திருமாலின் பெயர் கள்வன் ( கருமை ).
கள் - கள்வன் = கரியவன்.
கள் - காள் - காழ் = கருமை.
காள் - காளி. காளி -  வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும்.

கள்ளர்கள் இன்றும் திருமாலின் திருநாமம் ஆனா கள்வன் (கள்ளன்) என்ற பெயரை தங்கள் குல பெயராக கொண்டுள்ளனர். மன்னர்களாகவும், அரையர்ளாகவும் ( குறுநில அரசர்களாகவும்), பாளையகாரர்களாகவும் விளங்கிய கள்ளர்கள், தங்களின் குல பெயராக திருமாலின் திருநாமம்  அல்லது கருமையை குறிக்கும் கள்வன் என்ற சொல்லை கொண்டுள்ளனரே தவிர இழிவான பொருள் தரும் திருடன் என்ற சொல்லை தங்கி நிற்க்கவில்லை.

இதற்கு உதாரணமாக கள்ளர்கள் வெற்றிக்கு வணங்கிய காளி (கொற்றவ்வை) தெய்வம் கருமையை குறிக்கும்.

குறிச்சி, முல்லை நில மக்கள்  கள்ளர்கள் என்பதற்கு ஏற்ப, குறிஞ்சி, முல்லை நில மக்களின் பெயரான "நாடன்" ,"ஆய்" என்ற பெயர்களை கள்ளர் இன ஆண்கள், பெண்கள் இன்றும் கொண்டுள்ளனர் (நாடன், நாட்டார், நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார், நாட்டரசர், நாடாவி, நாட்டரியார், நாட்டரையர் , சிலம்பர் என்ற பட்டங்களையும், ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் பத்தினியாராகிய ராணி ரெங்கம்மாஆய்,  ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பத்தினியாராகிய ராணி ஆயிஅம்மாள் ஆய், சோழ மன்னர்கள் ஆய் குழி அகுசி ஏற்று, ஆய் அடும்பன், ஆய் நெடுஞ செட் சோழ தகையன், ஆய் கீழ் நன்னனால், ஆய் பேருண் தோன்னொஞ்சி, ஆய்வே நலங்கிள்ளி  )

இனி கள்வன், கள்ளன், கல்லன் என்பதற்கு அகராதி “திருடன்” என்று மட்டும் பொருள் தருகிறதா என்றால், அகராதியில் காலத்திற்கு ஏற்ப வேறு பொருளையே தருகின்றன.

கள்ளன் / கள்வன் / கல்லன்  - அகராதி தரும் விளக்கம்  :

1) கள் + அர் (படர்க்கை, பலர்பால்): கருமை + மக்கள் - கருமையான மக்கள்.

2) கள் + அன் (படர்க்கை, ஆண்பால்): கருமையானவன்

3) இறைவன் (கள்வன் தான் உள்ளத்திற் காண் - சைவ சித்தாந்த அகராதி)

4) திருமால் (“கள்வனொலி கொண்டவளை” - திருமாலினது முழக்கத்தைக் கொண்டசங்குகளை யுடைய)

5) கரியவன்  (  - சூடாமணிநிகண்டு , முத்தர்கட்கும் தன்னைக்
     காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனை  - சீவன் முத்தர்களுக்கும் அடைதற் கரியவன் சிவன்)

6) வெட்சி மறவன்  (அந்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென - அருஞ்சுரத்துக் மறவர் ஆக்களைத் தொழுவினின்றுங்

7) நண்டு (வேப்புநனை அன்ன நெடுங்கண் கள்வன் - ஐங்குறுநூறு - கள்வன் = நண்டு)

8) கற்கடகராசி

9) யானை

10) சோரன்

11) திருடன்

12) தீயோன்

12) பொல்லாதவன்

13) நடுச்செல்வோன்

14) முசு

கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்தாகவும் சோழ, பல்லவ நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது. தமிழ் எழுத்துகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன் வடிவத்திலும் மாற்றம் கொண்டது. (“ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”).

கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது. குசவன் - குயவன், சாதல் -சாவு, தன்செய்யூர் - தஞ்சாவூர் , அது போல் இன்று கள்வன், கள்வர், கள்ளன், கல்லன், என்ற சொல் கள்ளர் என்ற ஒற்றை சொல்லில் நிலைத்து விட்டது.

கள்வன் என்பது உயர் சொல்லாக இருந்ததாலே தான் மன்னர்கள் அதை உயர்வாக தங்கள் முன் சேர்த்துக்கொண்டனர்.

1) கள்வர் கோமான் புல்லி
2) கள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்)
3) ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
4) ஸ்ரீ கள்ள சோழன்,
5) ஸ்ரீ கள்வன் ராஜராஜன்
6) ஸ்ரீ கள்ள திருமங்கையாழ்வார்
7) நீகார்யம் - உடையார் உடையான் கள்வன் சோழன்
8) ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரி வேங்கை குத்தியது
9) கள்ள பெருமானார்
10) கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான்

மற்ற சில ஆய்வாளர்கள் கருத்துக்கள்

1) களவர் தமிழ்ச் சொல். களம் என்ற சொல்லிலிருந்து பெறப்படும்., களம் என்றால் போர்க்களம். களவர் என்றால் போர்க்களம் சார்ந்த மக்கள் அல்லது களம் புகுவோர் என்று பொருள்படும்.

2) திரு.மு.இராகவையங்கார் களவர் என்பது "கள்ளர்" என்பதற்குக் "கள்வர்” என்ற மாற்றுவடிவம் உண்டு; “களவர்" என்பது, பழைய ஓலைச்சுவரிகளில் “ள" என்பதன் கண் உள்ள புள்ளி இடப்பெறாமல் “களவர்” என ஆதலும் உண்டு.

3) கோவலர்------>கோளவர்------>களவர்----->கள்ளர்குடி ஆயினர்

4) களவர் - கள்வர - கள்வர்கள் - களேபர(ம்)ர்கள் – கலியரசர்கள்

5) "களவர்" - "களபர்" - "களபா" - "களப்ஹர" - "களப்ஹ்ர"

6) களவர் – கள்வர்  ( ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி)

இத்தனை பொருள் தமிழ் அகராதியில் கள்ளர்க்கு இருக்கையில் திருடன் என்பது வீண் விவாத பேச்சாளர்களின் அறியாமையே.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்