முருகின் தொன்மை

மு வரதராசனார் எழுதிய" முருகின் தொன்மை" என்ற நூலில் "குன்றுகள் தோறும் குடியிருப்பவன் குமரன்"என்று 2000 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துரைக்கிறார்..........முருகப்பெருமான் குன்று இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பார் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். அது பொய் அல்ல மெய் என்பதை நாம் இன்று இருக்கும் முருகப்பெருமான் திருத்தலங்களை வைத்து அறியலாம். ஆறுபடை வீடுகளில் முருகன் உறைவதாக நாம் அறிகிறோம். அவையாவன திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை என்பவை. இந்த ஆறு தலங்களும் குன்றின் மீதே அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் ஒரு குடைவரைத் தலம் ஆகும். இங்கு முருகன் குன்றின் மீது உள்ளார். பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, சோலைமலை ஆகிய தலங்களை நாம் நேரடியாக மலை மீது இருப்பதாகக் காணலாம். ஆனால் திருச்செந்தூர் கோவில் கடல் கரையில் இருப்பதாக அறிகிறோம். ஆனால் உண்மையில் இந்த கோவில் கடற்கரையோரமாக உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. செந்தூர் கோவிலில் உள்ள திருமால் பள்ளிகொண்டிருக்கும் இடத்தில் நாம் சந்தன மலையைக் காணலாம். திருப்புகழில் பாடப்பட்டு இருக்கும் பெரும்பாலான கோவில்கள் மலை மீதே உள்ளன. இவற்றில் சில கோவில்கள் முருகனை மூலவராகவும், சில கோவில்கள் சிவபெருமானை மூலவராகவும் கொண்டவை. ஆறுபடை வீடுகளையும் அருணகிரிப் பெருமான் தன்னுடைய திருப்புகழில் பாடிக் களித்து இருக்கிறார். ஆறுபடை வீடுகளில் நாம் சிவபெருமானை நான்கு கோவில்களில் தரிசனம் செய்யலாம். மேலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு ஆறுபடை வீடுகளும் இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்