பசும்பொன் தேவர் திருமகன்

"பசும்பொன் தேவர் திருமகன் காளைக்கு வர்ம அடியை அடித்தார்"

ஒரு சமயம் புளிச்சிகுளம் எஸ்டேடட்டில் விலை உயர்ந்த இரண்டு மாடுகள் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்தன. அதன் பக்கத்திலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து தேவர் திருமகன் ஒரு கிராமத்தார் வழக்கை விசாரித்துக் கொண்டு இருக்கிற போது பக்கத்தில் கட்டப்பட்டிருந்த காளை மாடுகளில் ஒன்று தலையை ஆட்டி தேவர் திருமகனின் தோளில் கொம்பாலே இடித்தது தேவர் திருமகனுக்கு இரத்தக் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஊமைக் காயம்.

எழுந்தார் தேவர் அந்தக் காளையும் முறைத்தது சடாரெண்டு என்ன செய்தார் என்று தெரிவதற்குள்ளாக காளையைக் தனது காலாலேயே ஒரு தட்டித்தட்டினார். அவ்வளவுதான் காளை கீழே விழந்து கால்கள் நான்கையும் படக் படக் என்றுஎன்று ஆட்டிக்கொண்டு துள்ளுகிறது துடிக்கிறது காளையின் தலை தரையில் கிடக்கிறது. கண்கள் மேல் நோக்கி செருகி நிற்கிறது.

இப்படி ஒர் ஐந்து விநாடிகள் அதன் பின் தேவர் தனது கையால் இன்னொரு இடத்தில் தட்டினார். காளை விருட்டென எழுந்து நின்றது.
இந்த காட்சியை அன்று வழக்குச் சொல்ல வந்த புளியச்குளம் கிராமத்தார்களும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்