ஈசநாட்டுக்கள்ளர்

ஈசநாட்டுக்கள்ளர்
===================

ஈசநாட்டுக்கள்ளர் (கூத்தைப்பார் கள்ளர், பெரிய சூரியூர் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர்) என்போர் கள்ளரில் ஓரு பிரிவினர்.

இவர்கள் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். கள்ளர்களே இந்த சோழ மண்டலத்தின் பூர்வகுடிகள் என்பதற்கு ஆதாரமாக கள்ளப்பற்றும் & கள்ளர் நாடுகளும், சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு ஆதாரமாக கள்ளர் பட்டங்களும் மற்றும் இங்கே உள்ள எல்லா பாளையக்காரர்களும் கள்ளர்களே.

இவர்களில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும், பல்லவராய மன்னர்களும் 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழ மண்டலத்தில் குடியேறினர்.

ஈசநாட்டுக்கள்ளர்களுடைய குலப்பட்டம் -

தொண்டைமான் (புதுக்கோட்டை சமஸ்தானம்), சோழங்கதேவர் , இராசாளியார், பல்லவராயர், மழவராயர், நாட்டார், வன்னியர், அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், முத்தரையர், ஒண்டிப்புலியார், கடாரம்கொண்டார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்கொண்டர், நாடாவி மேலும் பல சிறப்பு பட்டங்கள்.

சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக் கொள்கின்றனர்.

சம்பட்டியார் என்பது ஒரு சாராருக்கு பட்டமென்றால், அவர்கள அதே சம்பட்டியார் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டார்கள். ஒரே பட்டம் உள்ளவர்கள் பங்காளிகள்.

குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன்), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டு - நூல் ஆசிரியர்  . கருணாமிர்த சாகரம் , ஆசிரியர்  . ஆபிரகாம் பண்டிதர்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்