கானாடுகாத்தானில் தேவர்

"துப்பாக்கிக்கு அஞ்சாத பசும்பொன் தேவர்"

கானாடுகாத்தனில் மாபெரும் கூட்டம் தேவர் பேச்சைக் கேட்க காத்திருந்தது. அந்தக் கூட்டத்திற்கு தேவர் இரவு 10 மணிக்கு போய்ச் சேர்ந்தார். அதற்கு முதல் நாள் சத்தியமூர்த்தி ஐயரை துப்பாக்கியை காட்டி பேசவிடாமல் தடுத்து விட்டாதால் தேவர் பேசுவாரா? அல்லது தேவரையும் பேச விடாமல் போலீசார் தடுத்து விடுவார்களா? என்று பார்க்க சுமார் 50 ஆயிரம் போர் கூடி இருந்தனர்.

தேவர் மேடைக்கு வந்ததும் 10 நிமிடம் கரகோஷம் வானை முட்டியது. கரகோஷம் ஓய்ந்தததும் கம்பீரமாக நின்று சிங்கத்தின் கர்ஜனை போல பேசினார் தேவர்.

"நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை துப்பாக்கி காட்டி பேசவிடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப் இன்ஸ்பெக்டர் அவர்களே உங்களூக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை துப்பாக்கியில் மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக பாரதமாதா விலங்கு ஒடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலேயே சாவதற்குத் தயார் சப் இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா? என்று சாவல் விட்டார்.

எந்த சப் இன்ஸ்பெக்டரும் மேடைக்கு வரவில்லை. சத்தியமூர்த்தி நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கி தேவரின் நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்டால் என்ன நடக்கும் என்பது அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்ததால் வரவில்லை.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்