பசும்பொன்

"பசும்பொன் தேவர் திருமகனாரின் தன் வாழ்வில் தினமும் கடைப்பிடித்த   நிகழ்வுகள்"

பொற்கோழி கூவும் குரல் கேட்டதும் எழுவார். காலைக் கடன்களை நிறைவேற்றி குளித்து முடிப்பார். கதிரவன் தமது பொற்கரங்களை விரிக்கும் முன்னதாகவே வழிபாடுகள் எல்லாம் செய்து முடிப்பார். பின்னர் வந்து அமருவார் தேவர் இல்ல சதுக்கத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள் ஒர் குவலை நிறைய நீர் ஆகாரம். பழைய சோற்று தண்ணீர் அதை குடிப்பார். வேறு ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை காலையிலே...

ஒரு வேளை உண்பவன் யோகி...!
இருவேளை உண்பவன் போகி...!
பல வேளை உண்பவன் துரோகி...! என்பதை முற்றும் உணர்ந்தவர் திருமகனார்....

வழிபாடு செய்யும் அறை:

ஆடம்பரமான அழகு பொருள்கள் கண்ணைக் கவரும் வண்ணச்சித்திரங்கள் எதுவும் காண முடியாது அறையிலே 4×4 அடி சதுரம் சிறிய அரை தான்.

தமது குருநாதர் வேல் தாங்கிய வேலவன் படம், ஒலித்துக் கொண்டிருக்கும் வலம்புரிச் சங்கம், பச்சைக் கம்பளம் அதன் மீது அழகான புலித்தோல், பர்மாவிலிருந்து பரிசாக வந்த சில பொருள்கள் காசி செம்பும் நிறைய நீர், விபூதி, சூடத்தட்டு, சிறு துளசி மாலையும் தான் காணப்படும்.

காவி உடையோ, கழுத்தில் உத்திராக்க மாலையோ, தண்டு கமண்டலம் ஏந்தியதில்லை வழிபாடு செய்யும் நேரங்களில் கூட கண்டவரும் இல்லை. வழிபாடு செய்து முடிந்து சதுக்கத்தில் வந்து திருமகனார் அமர்ந்த பின்னர் தான் உறவினர்களும், பார்வையாளர்களும் உள்ளே வருவார்கள். அதுவரை காத்திருப்பார்கள் குறிப்பிட்ட இடத்திலே...

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்