சோழ அரசர்கள்

சோழ அரசர்கள்.

    பிரமன், உலகம் படைத்தவன்
    காசிபன், பிரமன் மகன்
    மரீசி, மேதக்க மையறு காட்சியன்
    சூரியன், எல்லாளன், ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன்
    மனுச்சோழன், பசுவுக்கு நீதி வழங்கியவன்
    ஆடுதுறை அறனாளன், புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன்
    வானூர்தி அரசன்
    தேவருலகைக் காத்தவன்
    வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன்,
    முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன்
    தூங்கும் எயில் எறிந்த சோழன்
    மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன்
    நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன்
    சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன்
    காவிரி தந்தவன், குடகு மலையைப் பிளந்து காவிரியாற்றைச் சோழநாட்டில் பாயச் செய்தவன்
    இமயத்தில் தன் ஆண்-புலிச-சின்னத்தைப் பொறித்தவன்
    காவிரியாற்றுக்குக் கரை கட்டியவன்
    களவழி நாற்பது பாடலைக் கேட்டுக் கணைக்காலிரும்பொறையின் கால் விலங்கை நீக்கியவன்
    தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்ட சோழன்
    தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்.
    ஒரே பகலில் 18 பாலைநிலங்களையும், மலைநாட்டையும் (சேரநாட்டையும்) வென்றவன்
    கங்கையையும், கடாரத்தையும் தன் படையை அனுப்பி வென்றவன்
    வங்கநாட்டுக் கல்யாணபுரத்தை மூன்று முறை தாக்கி அழித்தவன்
    கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன்.
    திருவரங்கப் பெருமானுக்கு மணிகளாலான பாம்புப்படுக்கை அமைத்துக் கொடுத்தவன்
    கூடல் சங்கமப் போரில் 1000 யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்