சோழர்கள் கள்ளர்களே
சோழர்கள் கள்ளர்களே என்பதற்கு மிக முக்கியமான ஆதாரத்தை விட்டுச் சென்றவர்---
இரண்டாம் இராஜராஜ சோழனே ஆவார்.
சோழ மன்னர்கள் வெட்டிவைத்துவிட்டுச்
சென்ற சோழ மண்டல நதிகள், போரேரிகள்,
குளங்கள், வாய்க்கால்கள்..முதலானவற்றை
இக்கட்டுரையில் குறிப்பிடும் முன், இரண்டாம்
இராஜராஜ சோழன் தன்னைப் பற்றி விட்டு
வைத்துள்ள முக்கிய வரலாற்றுச் செய்தியும்
முதுபெரும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர்
குடவாயில் பாலசுப்பிரமணியன், M.A.,M.Phil.,
Ph.D., அவர்கள் (இவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜே.ஜெயல லிதா அவர்கள் கைகளால் நேரிடையாக அளித்துள்ள பட்டமும் பொற்கிழியும் பெற்றவர். இப் பட்டமும், பொற்கிழியும் அவருடைய சிறந்த கல்வெட்டு ஆய்வுகளுக்காகவும் அரிய வர
லாற்றுச் செய்திகளை கண்டுபிடித்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அளித்தமைக்காகவும் அவருடைய சீரிய &
சிறந்த சேவைக்காகவும் அளிக்கப்பட்ட வெகு
மதியாகும்)...சிறந்த கல்வெட்டுப் பெருந்தகை
யாளரான டாக்டர் குடவாயில் பாலசுப்பிர மணியம், Ph.D. _அவர்கள் என்னை நேரில் அழைத்துக் கொடுத்த ஆதாரங்களையும்
நண்பர்களாகிய உங்களுடன் இதன் மூலம்
பகிர்கின்றேன்..
சோழப் பேர ரசர்களில் முக்கியமானவரான
இரண்டாம் இராஜராஜ சோழன், மைசூரில்
காவிரியின் குறுக்கே கட்டப்ட்டிருந்த அணையை உடைத்து தமிழகத்திற்கு காவிரி
நீரைக் கொண்டு வந்த தை முன்பு குறிப்பிட்ட
டுள்ளேன். கண்டு ரசிக்க நமக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையை தூண்டிவிடும் கோடிச் சிற்பங் களை அமைத்து அற்புதமான கற்கோயிலைக்
கட்டிய கலைச் சிகாமணி இந்த இரண்டாம் இராஜ ராஜ சோழனே ஆவார். இவர் ஏன்
இந்த கற் கோயிலைக் கட்டினார் என டாக்டர்
குடவாயிலார் அற்புதமாக அவர் எழுதிய
தாராசுரம் ஐராவதீசுவர ர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) என்ற நூலில் விவரித்துள்
ளமை படிப்போர் மனதை அந்நூலோடு ஒன்றில் போகச் செய்து அந்நூலோடு நம்மைப் பிணித்துவிடும் அரிய தகவல்கள்
கொண்ட நூலாகும். உண்மையில் இந்நூலை
திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் உள்ள
சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை
அப்பெருந்தகையாளரை இந்நூலை எழுதும்
படி செய்து பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்
வதி அவர்கள் கைகளால் 2013ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் சேக்கிழார் அடிப்பொடி, தெய்வச் சேக்கிழார்
சைவசித்தாந்த பாடசாலை-- அவர்கள் இந்நூல் பற்றி அணிந்துரையில் எழுதியுள்ள
செய்தி வருமாறு:--
"இரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய
சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம் மாமன்னன் வேண டுகோளுக்கிணங்கி
திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச்
சொல்லில் வடித்தார். அம்மாமன்ன ன் மகனா
கிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார்
அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவரு
டைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்
சொன்ன திருத் தொண்டர் புராணத்தைக்
கவின் கலை நுட்பத்துடன் (கருங்)கல்லில்
(சிற்பமாக) வடித்தார்..." இவ்வாறு எழுதியுள்ளார்.
ஆரூர் நம்பியாரூராராகிய சுந்தரமூர்த்தி
சுவாமிகள் அருளிய திருத் தொண்டர் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும்
அநபாயச்சோழன்(எ) இரண்டாம் குலோத்துங்க சோழச் சக்கரவர்த்தியின்
வேண்டுகோளை ஏற்று அவருடைய முதல்
அமைச்சராக விளங்கிய தெய்வச் சேக கிழார்
பெருமான் அருளிய திருத்தொண்டர் புராண
மும் ..நம் வரலாற்றை அறிய உதவும் அற்புத
வரலாற்றுப் பெட்டகங்களாகும். திருத் தொண்டர் புராணத்தை தெய்வச் சேக்கிழார்
ஓலைச் சுவடிகளில், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில்(கி.பி.1133--
1150) பாடியருளினார். அவருடைய மகன்
இரண்டாம் இராஜராஜ சோழனோ(கி.பி.1146-
1163) தன் தந்தை காலத்தில் சேக்கிழார்
பாடிய 63 நாயன்மார்களின்(சிவனடியார் களின்) வரலாற்றை தாராசுரம் கற்கோயிலை
கட்டி, அக்கோயிலில் 63 நாயன்மார்களின்
வரலாற்றை கற் சிற்பமாக சேக்கிழார் வழி
காட்டுதலின்படி அற்புதமாக பார்ப்போர்
இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அழகிய
அபிநயத்துடன் வடித்து வைத்தார். ஓலைச்
சுவடிகள் அழியக் கூடியவை. ஆனால், கற்
சிற்பங்கள் காலவெள்ளத்தில் கரையாதவை.
அதற்காகவே, தாராசுரம் கோயிலை இரண்டு
டாம் இராஜராஜ சோழன் கட்டினான் என்பது
மிகையன்று. தன் தந்தையின் விருப்பத்தில் உரு வான63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு காலவெள்ளத்தில் அழிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தாராசுரம் கோயிலைக் கட்டி அக்கோயிலில் 63 நாயன்
மார்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புத
கற்சிற்பங்களாக மகனான இரண்டாம் இராஜ
ராஜ சோழன் வடித்து வைத்தார். நாயன்மார்
களின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் காட் சிகளில், நமக்கு முக்கியமானது, நம் கொடும்
பாளூர் அரசர் இடங்கழி நாயனாரின் வரலாற்றை காட்டும் அற்புத கற்சிற்பம் ஆகும். அக்காட்சியை வடித்துள்ள அச்சிற்பம் இக்கோயிலின் முக்கியமான பகுதியான கரு
வறையின் புறச்சுவற்றில் 54ஆம் காட்சி யாகவும் தொடர் சிற்ப வரிசையில 65ஆம்
காட்சியாகவும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இச்சிற்பக் கோயில், யுனெஸ்கோ நிறுவனத்
தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறி
விக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது
என்பதும் முக்கியச் செய்தியாகும்.
இடங்கழி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றை விவரித்த தெய்வச் சேக்கிழார்
இடங்கழி நாயனாரை சோழ மன்னர்களின்
மரபில் தோன்றிய முன்னோர் என்பதை
குறிப்பிட்டுள்ளார். இதை டாக்டர் குடவாயில்
பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்நூலின்
247ஆம் பக்கம் வரிகள் 10--13இல் எழுதி
யுள்ளதாவது:--
"...தில்லை அம்பலத்துக்குப் பொன் வேய்ந்த
ஆதித்தனுக்கு முன்னோராகிய சோழர் மரபில் உதித்து கோனாட்டின் தலைநகராகிய
கொடும்பாளூரில் வேளிர் குல அரசராக
விளங்கியவரே இடங்கழி நாயனாராவார்.."
..வரலாறு தொடரும்

Comments
Post a Comment