திரு அருணகிரிநாத சுவாமிகள்

திரு அருணகிரிநாத சுவாமிகள் திருமுருகப்பெருமானை
நோக்கி விண்ணப்பிக்கின்ற திருப்புகழ்ப் பாடல் உணர்த்தும் கருத்தும்
நம் அனைவரின் சிந்தனைக்குரியது. திருமுருகனின் பக்தர்கள்
அனைவருக்கும் நன்கு அறிமுகமான அத் திருப்புகழ்ப் பாடல்
பின்வருமாறு:

  'ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே
    ஈசருடன் ஞானமொழிபேசும் முகம் ஒன்றே
  கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
  மாறுபடு சூரரைவதைத்த முகம் ஒன்றே
    வள்ளியை மணம்புணரவந்த முகம் ஒன்றே
  ஆறுமுகம்ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
    ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே.

பாடல் 1328 - ஏறுமயில் ஏறி.

மயில்வாகனன் என்று அன்புடன் அழைக்கப்பெறும்
திருமுருகப்பெருமானுக்கும், குறிஞ்சி நிலப்பகுதியைச் சேர்ந்த மயிலுக்கும்
மிகப் பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது
என்று தெரிகின்றது. சங்க இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த
நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் செழுமையையும் இயற்கை
அழகினையும் பிரதிபலிக்கும் பறவையாக விளங்கிய மயில், திருமுருகனின்
சிறப்பு வாகனமாகிய பின்னர், கருடனைப்போல் வானத்தில் அதிக
உயரத்தில் பறக்கவல்ல ஆற்றலை உடையது எனவும் கடலுடன்
தொடர்புடையது எனவும் கருதப்படலாயிற்று. இவ்வாறு, நிலம், வானம்,
கடல் ஆகிய மூன்று பிரதான இயற்கைச் சக்திகளுடன்
தொடர்புடையதாகக் கருதப்பட்ட மயில், பிரபஞ்சத்தின்
முழுமுதற்கடவுளாகிய திருமுருகப்பெருமானின் சிறப்பு
வாகனமாகியதில் வியப்பில்லையன்றோ! அருணகிரிநாத சுவாமிகள் திருமுருகப்பெருமானை

வாகனமாகியதில் வியப்பில்லையன்றோ!

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்