சிவகங்கை_சீமை_உதயம்

சிவகங்கை_சீமை_உதயம்

27.01.1730-ல்
#மாமன்னர்_சசிவர்ணத்தேவரால்

 சிவகங்கை சீமை தோற்றுவிக்கப்பட்டது. வீரம் விளைந்த சிவகங்கை சீமை உதயமாகி இன்று 288 ஆண்டுகள்.

சிவகங்கைச் சீமை போற்றுவோம்...!!!

சிவகங்கைச் சீமை வரலாற்று சுருக்கம்

17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய ராமநாதபுர சமஸ்தனமாகும்.

 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7 வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 2000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார்.

 விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10வது மன்னராக தனக்குத் தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ண தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியை கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டி கட்டயத்தேவர் மன்னரானார்.

உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்