Posts

Showing posts from June, 2018

பித்தேகோரசு தேற்றம்

Image
பித்தேகோரசு தேற்றம்---------------------------போதையனார் பாட்டு இவர் செம்பக்கத்தை அல்லது கர்ணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தன் பாடலில் கூறியுள்ளார். "ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே. இதன் பொருள் செங்கோண முக்கோண நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் "என்பதாகும்.

கோமுக்தீஸ்வரர் கோவில், திருவாவடுதுறை

Image
கோமுக்தீஸ்வரர் கோவில், திருவாவடுதுறை சிவஸ்தலம் பெயர் திருவாவடுதுறை இறைவன் பெயர் மாசிலாமனி ஈஸ்வரர், கோமுக்தீஸ்வரர் இறைவி பெயர் அதுலகுச நாயகி -----------------------------------------------------தலத்தின் சிறப்பு: சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார் திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சி

பசுபதிநாதர் கோவில்

Image
பசுபதிநாதர் கோவில், கருவூர் ( கரூர் ) கோவில் அமைப்பு: கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு. கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசு

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்

Image
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்------திருப்பாதிரிபுலியூர், கடலூர்------ திருநாவுக்கரசர் கரையேறிய கதை : திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. சிவகரை தீர்த்த சிறப்பு : சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த  இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம். மத்தியந்தன முனிவர் மகன் பூசித்

குற்றாலநாதர் கோவில்

Image
குற்றாலநாதர் கோவில்------கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார். கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்ட

கடம்பவனநாதர்

Image
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தி

நாரையூர்

Image
நாரையூர் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோவிலுக்கு முன் உள்ளது இத்தலம். சித்தர்கள் பலரும் பூசித்ததால் சித்தீச்சரம் எனப்பெயராயிற்று. மேலும் செல்வத்திற்கு அதிபதியாம் திருமகள் ஸ்ரீலெட்சுமி தேவி அவதரித்ததும் இத்தலத்திலேயே ஆகும். ஸ்ரீ அதி மேதாவி மகரிஷி என்றொருவர் இத்தலத்தில் தவம் செய்து வந்தார் அருகேயுள்ள சித்தாம்ருத தடாகம் எனும் குளத்தில் நீராடி ஸ்ரீ அதிமேதாவி மகரிஷி தவம் செய்து வர ஸ்ரீசித்தனாதர் காட்சியளித்து என்னவரம் வேண்டும் எனக் கேட்டார். மஹாலெட்சுமி தேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் எனக் கேட்க அவவாறே அருளினார். அதன் படியே ஸ்ரீலெஷ்மிதேவி இத்தலத்தில் பிறந்து தக்கபருவம் அடைந்ததும் ஸ்ரீபரமேஸ்வரனும்பார்வதிதேவியும் சேர்ந்து ஸ்ரீஸ்ரீநிவாசப்பெருமளுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஸ்ரீ அதிமேதாவி மகரிஷியும் பேரானந்தம் அடைந்தார். முக்கிய ஸ்தலம்: கடும் கோப துர்வாசர் ஸ்ரீ சித்தனாதரை வழிபட அவருடைய சாபங்கள் நீங்கி முக்தியை அளித்த ஸ்தலமாகும். 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் சித்தர் இத்தலத்தில் வெகுகாலம் யோக தவம் செய்து வழிபட்டுள்ளார். மேலும் பல சித்தர்கள் இத்தலத்தில் உ