அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்------திருப்பாதிரிபுலியூர்,
கடலூர்------ திருநாவுக்கரசர் கரையேறிய கதை : திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.
அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
சிவகரை தீர்த்த சிறப்பு : சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.
மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே
திருநாவுக்கரசை முதன்முதலில் "அப்பர்' என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.------ வைகாசி விசாகம் -10 நாட்கள் - வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு - 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி - மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் - 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.

Comments
Post a Comment