Posts

Showing posts from May, 2019

சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை

Image
சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை நேரம் எடுத்து படித்துகொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக. படித்துவிட்டு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். சிவாயநம. பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம் 1.     பெரிய நிலப்பரப்பு 2.     வானளாவிய கோபுரங்கள் 3.     பெரிய திருச்சுற்றுக்கள் 4.     பெரிய மதில்கள் 5.     பெரிய திருக்குளங்கள் 6.     உயர்ந்த பெரிய வாயில்கள் 7.     உட்கோயில்களும் பெரிய அமைப்பினை உடையன 8.     பெரிய திருஉருவங்கள் 9.     பெரிய வாகனங்கள் 10. பெரிய திருவிழாக்கள் பெரிய சிவன் கோயில்கள் 1.     தில்லைத் திருக்கோயில் 2.     மதுரை சுந்தரேசுவரர் கோயில் 3.     திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் 4.     இராமேசுவரம் இராமநாதர் கோயில் 5.      திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோயில் 6.     திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 7.     கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் 8.     தஞ்சை பிரகதீசுவரர் கோயில் 9.     சீர்காழி பிரமபுரீசுவரர் கோயில் 10. திருவையாறு ஐயாறப்பர் கோயில் 11. திருவாரூர் வன்மீகநாதர் கோயில் 12. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில். மதுரை ஆலயம

தென்காசி காசி விஸ்வநாதர்

Image
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும். செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்

Image
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட தென்காசி பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். ஆற்றிய போர்கள் திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன். ஆற்றிய அறப்பணிகள்     விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.     திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.     நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.     தென்க

தாமிரபரணி

Image
தன் பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. பொருநையின் போக்கு பொதிய மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி. வரலாறு கல்யாண தீர்த்தம் முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத

திருவண்ணாமலை

Image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழ

கள்ளழகர்

Image
***********#கள்ளர்_இனத்_தலைவன்*********** ******************#கள்ளழகர்****************** என் கள்ளர் இனத் தலைவர் ஶ்ரீகள்ளழகரின் சித்திரைத் திருவிழா காணும் நேரத்தில் இந்த கட்டுரையை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பழங்காலங்களாக சில போலிகள், ஶ்ரீகள்ளழகர் என்பது திருமலை நாயக்கர் காலத்தில் கள்ளர்களை சமாதானப்படுத்த அழகரை கள்ளழகராக மாற்றினார்கள் என்று பொய்யுரைத்து வருகிறார்கள். அவர்களின் அறியாமை எழுத்துக்களுக்காகவும், எமது இனத்திற்கு உன்மை வரலாறை எடுத்துரைப்பதற்காகவே இந்த கட்டுரை. “#நாடறிந்த_கள்வன்_நாரணன்_ஆனான் என்பது திருமாலைப் பற்றிய மிகவும் தொன்மையான பழமொழி, அதாவது நாட்டவர்கள் அனைவரும் அறிந்த கள்ளனே அவதாரம் ஆகிறான் என்பது பொருளாகும். நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடியவர்களில் ஒருவரான நம்வாழ்வார் திருமாவிலஞ்சோலை(அழகர் மலை)யில் உள்ள திருமாலை, #வஞ்சக்_கள்வன்_மாமாயன் என்றே அழைக்கிறார், மேலும் அழகர் மழையை திருமால் இருக்கும் சோலை என்றும் கூறுகிறார். திரு என்றால் = தெய்வத்தன்மையுடைய என்று பொருள் மால் என்றால் = கருப்பு,கரியவன் என்பது பொருள் ஆக திருமால் என்பது தெய

குன்றாண்டார் கோயில், புதுக்கோட்டை

Image
விநாயகர் ராஜேந்திர சோழர் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வடநாட்டு கடவுள் என சிலர் எழுதியுள்ளனர்.... ஆனால் கிபி 8 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை பகுதி குடைவரைக்கோயில்களில் விநாயகருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை காணலாம். ( பாறையில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் :::: குன்றாண்டார் கோயில், புதுக்கோட்டை)

புகார் நகரின் கடைசி சோழன் நெடுமுடிக்கிள்ளி சோழன்

Image
#புகார் நகரின் கடைசி சோழன்  நெடுமுடிக்கிள்ளி சோழன்  🐅:     நெடுமுடிக்கிள்ளி சோழனின் தந்தையின் சகோதரி நற்சோணை சேர நாட்டில் மணமுடிக்கப்பட்டு சேர அரசியானவர்.அவரின் மகன்  சேர அரசனான  செங்குட்டுவன் . அதனால் இவ்வரசன்   செங்குட்டுவனிற்கு 'மைத்துனச் சோழன்’ என்றழைக்கப்பட்டார் .   நெடுங்கிள்ளியின் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவருடன் போரிட்டனர். நெடுங்கிள்ளிக்கு ஆதரவாக  செங்குட்டுவன் கலகம் செய்த பங்காளிகள் அனைவரையும் #நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, நெடுமுடிக்கிள்ளியை அரசனாக்கினார் . சோழ நாட்டின் தொண்டை மண்டலத்தை பாண்டிய அரசனும் , மற்றொரு சேர அரசனும் தாக்கினர். நெடுங்கிள்ளியின் தம்பி #இளங்கிள்ளி  இருவரையும் தோற்கடித்து தொண்டை மண்டல பகுதிகளுக்கு அதிபதியாகி காஞ்சியை தலை நகராகக் கொண்டு அரசாண்டார்.   நெடுங்கிள்ளி அரசருக்கு வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி என்று பல பெயர்களில் குறிக்கப்பட்டார்.      பாணர் மரபில் வந்த சீர்த்தி என்ற  இளவரசியை மணந்து சோழ நாட்டு அரசியாக்கினார் . இவர்களுக்கு பிறந்த மகன் உதயகுமாரன் . உதயகுமாரன் மாதவியின

கடல் போக்குவரத்தை துவங்கிய சோழன்

Image
கடலினை இணைத்து கடல் போக்குவரத்தை துவங்கிய சோழன் :      தொன்ம சோழரில் தங்களது புகழ்பெற்ற செய்கையினால் வரலாற்றில் தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர் . நாட்டை செழிப்பாக்கவும் வர்த்தகத்தினை வளப்படுத்தவும் அயல் நாட்டு வியாபாரம் முக்கியமானதாய் இருந்தது. சங்கர்ஷன சக்ரவர்த்தி என்ற சோழன் வங்கக் கடலிற்கும்  , அரபிக் கடலிற்கும் இடையில் இருந்த திட்டுக்களையும் , தடைகளையும் தகர்த்து , கடல்களை ஒன்றினைத்து நீர் போக்குவரத்திற்கான முதல் முயற்சியை துவங்கினார் . இதுவே சோழர்கள் இலங்கையை கைப்பற்றுவதற்கும் , கடல் கடந்த நாடுகளை அரசாளவும் முக்கிய காரணமாய் இருந்தது . இன்றைய பாக் ஜலசந்திப் பகுதியில் இந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இதனால் சோழ அரசர் கடலினை வென்றவர் என்ற பொருள் படும்படி #சமுத்திரஜித் என்று புகழப்பட்டார்.   "மேல்கடல் நீர் கீழ்கடற்கு விட்டோன் " என்று விக்கிரமாதித்த உலாவில் பாடப்படுகிறார்.  சோழர்கள் கடல்வழி வியாபாரம் மற்றும் கடற்கடந்த படையெடுப்பிலும் சிறந்தவராக இருந்தனர் . தொன்ம காலத்தில் சோழர்களிடத்தில் மட்டுமே அதிக கப்பல்கள் இருந்தன..