கடல் போக்குவரத்தை துவங்கிய சோழன்

கடலினை இணைத்து கடல் போக்குவரத்தை துவங்கிய சோழன் : 

    தொன்ம சோழரில் தங்களது புகழ்பெற்ற செய்கையினால் வரலாற்றில் தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர் . நாட்டை செழிப்பாக்கவும் வர்த்தகத்தினை வளப்படுத்தவும் அயல் நாட்டு வியாபாரம் முக்கியமானதாய் இருந்தது. சங்கர்ஷன சக்ரவர்த்தி என்ற சோழன் வங்கக் கடலிற்கும்  , அரபிக் கடலிற்கும் இடையில் இருந்த திட்டுக்களையும் , தடைகளையும் தகர்த்து , கடல்களை ஒன்றினைத்து நீர் போக்குவரத்திற்கான முதல் முயற்சியை துவங்கினார் . இதுவே சோழர்கள் இலங்கையை கைப்பற்றுவதற்கும் , கடல் கடந்த நாடுகளை அரசாளவும் முக்கிய காரணமாய் இருந்தது . இன்றைய பாக் ஜலசந்திப் பகுதியில் இந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இதனால் சோழ அரசர் கடலினை வென்றவர் என்ற பொருள் படும்படி #சமுத்திரஜித் என்று புகழப்பட்டார்.   "மேல்கடல் நீர் கீழ்கடற்கு விட்டோன் " என்று விக்கிரமாதித்த உலாவில் பாடப்படுகிறார்.  சோழர்கள் கடல்வழி வியாபாரம் மற்றும் கடற்கடந்த படையெடுப்பிலும் சிறந்தவராக இருந்தனர் . தொன்ம காலத்தில் சோழர்களிடத்தில் மட்டுமே அதிக கப்பல்கள் இருந்தன..

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்