கள்ளழகர்
***********#கள்ளர்_இனத்_தலைவன்***********
******************#கள்ளழகர்******************

என் கள்ளர் இனத் தலைவர் ஶ்ரீகள்ளழகரின் சித்திரைத் திருவிழா காணும் நேரத்தில் இந்த கட்டுரையை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பழங்காலங்களாக சில போலிகள், ஶ்ரீகள்ளழகர் என்பது திருமலை நாயக்கர் காலத்தில் கள்ளர்களை சமாதானப்படுத்த அழகரை கள்ளழகராக மாற்றினார்கள் என்று பொய்யுரைத்து வருகிறார்கள்.

அவர்களின் அறியாமை எழுத்துக்களுக்காகவும், எமது இனத்திற்கு உன்மை வரலாறை எடுத்துரைப்பதற்காகவே இந்த கட்டுரை.

“#நாடறிந்த_கள்வன்_நாரணன்_ஆனான் என்பது திருமாலைப் பற்றிய மிகவும் தொன்மையான பழமொழி, அதாவது நாட்டவர்கள் அனைவரும் அறிந்த கள்ளனே அவதாரம் ஆகிறான் என்பது பொருளாகும்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடியவர்களில் ஒருவரான நம்வாழ்வார்

திருமாவிலஞ்சோலை(அழகர் மலை)யில் உள்ள திருமாலை,

#வஞ்சக்_கள்வன்_மாமாயன் என்றே அழைக்கிறார், மேலும் அழகர் மழையை திருமால் இருக்கும் சோலை என்றும் கூறுகிறார்.

திரு என்றால் = தெய்வத்தன்மையுடைய என்று பொருள்
மால் என்றால் = கருப்பு,கரியவன் என்பது பொருள்

ஆக திருமால் என்பது தெய்வத்தன்மையுடைய கரியவன் என்றும் தெய்வத்தன்மையுடைய கருப்பன் என்பதே பொருள் தரும்.

மிகவும் பழமையான சங்க இலக்கியம் பரிபாடலில் ஶ்ரீகள்ளழகர் எப்படி இருப்பார் என்பதனை பாடலாக விளக்குகிறது.

“கள்ளணி பசுந்துள்ளவை, கருங்குன் றனையே;
ஒளளொளியவை ; ஒருகுழையவே;
புள்ளனி பொலங் கொடியவை;
வள்ளணி வளைநாஞ்சிலவை;
சலம்புரி தண்டேந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரிசிலை வய அம்பினவை;
புகரிணர்சூழ் வட்டத்தவை ; புகர்வாளவை;
எனவாங்கு;
நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி;
இதுவென உரைத்தலினெம் உள்ளமந்து இசைத்திறை
இருங்குன்றத்து அடியுறை இயைகெனப்
பெரும்பெயர் இருவரைப் பரவுதுந்த் தொழுதே;

என்று கூறுகிறது.

விளக்கம்:-

கள்ளரணியான துளசி மாலை அணிந்தவன்;
கருங்குன்றம் போன்றவன்;
ஒளிக்கு ஒளியானவன்;
காதில் குழை(கடுக்கண்) அணிந்தவன்;
கருடக்கொடி உடையவன்;
மேலும்,கீழும் வளைந்திருக்கும் வளரியை கொண்டவன்;
சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை(வேல் கம்பு)உடையவன்;
சங்கும்,சக்கரமும் கொண்டவன்;
விரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு உடையவன்;
புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி உடையவன்;
புள்ளியிட்ட வாள் ஏந்தியவன்.

என்று கள்ளர் தலைவராக வளரி,வாள்,வேல்,வில்,கள்ளர் கடுக்கன் என கள்ளர் திருக்கோலத்தை சங்க இலக்கியத்திலே திருமாலை கள்ளராக பாடப்பெற்றுள்ளது.

மேலும் ஆண்டாள் நாச்சியார் அழகர் மலை கள்வனை காதலிப்பதாக நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளார்.

ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலுக்கு பாண்டியர்கள்,சோழர்கள்,வாணாதிராயர்கள்,நாயக்கர்கள் என தொடர்ந்து இத்தளத்திற்கு திருப்பணி செய்து வந்துள்ளனர்.

ஆதி முதலே ஶ்ரீகள்ளழகர் மலைப் பகுதியை சுற்றி கள்ளர் பெருங்குடிகள் வாழ்ந்து இக்கோவிலை பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்த பகுதியை முழுமையாக திருமலை நாயக்கர் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர என்னும் போது மேல் நாட்டு தன்னரசு கள்ளர்களுக்கும்,திருமலை நாயக்கருக்கும் யுத்தம் நடைபெறுகிறது.

இந்த யுத்தத்தில் திருமலை நாயக்கரால் தன்னரசு கள்ளர்களை வெல்ல முடியாமல், திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு மதுரை வீரனை(கள்ளரே) வர வைத்து கள்ளர்களை கருவறுக்க திட்டம் போடுகிறார்.

ஆனால் இறுதி வரை தன்னரசு நாட்டாரை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
பிறகு அழகர் மலை மற்றும் மேல் நாடு உள்ளிட்ட பகுதிகளை கள்ளர்கள் தங்களது கட்டுப்பாட்டிலே ஆங்கிலேயர் காலம் வரை ஆண்டார்கள் என்பதே வரலாற்று உன்மை.

வரலாறு இப்படி இருக்க திருமலை நாயக்கர் தான் கள்ளர்களுக்கு இந்த உரிமைகளை கொடுத்தார் என்ற அடிப்படை ஆதாரமற்ற கூற்றை எப்படி அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்......?

வளரி என்பது கள்ளர் பெருங்குடிகளின் வாழ்க்கையில் இரத்தமும்,சதையுமாக இருகிப் போன ஒன்று என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

சிவகங்கை,மேலூர் நாட்டார் கள்ளர்கள் கிபி1905வரை “வளரியை அனுப்பி,பெண்னை கொண்டு வா” என்றே திருமணத்தில் முழங்கியுள்ளனர். மேலும் வளரியை சீதனமாகவும் கொடுத்துள்ளனர்.

நாயக்கர் படைகளை எதிர்கொள்ள அழகர் மலை கள்ளர்கள் வளரி,வேலை வைத்தே எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருமாலை பல இடங்களில் கள்ளராகவே வழிபடுகிறார்கள்.

#கள்ள_பிரான்  (ஶ்ரீவைகுண்டம்)
தூத்துக்குடி மாவட்டம்

#கள்ள_பெருமாள் (காஞ்சிபுரம்)
காஞ்சிபுர மாவட்டம்
இதே காஞ்சிபுர மாவட்டத்தில் #சோழகங்கர் சிற்றரசரின் கல்வெட்டில் அரசரின் பெயராக கள்ள பெருமாள் என்று உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் கோவிலில் இருந்து ஶ்ரீகள்ளழகர் கையில் வளரி,வேலும் காதில் கள்ளர் கடுக்கன்,தகையில் கள்ளர் தலைப்பாகையுடன், தங்க குதிரையில் ஏறி மேல் நாட்டு கள்ளராகவே மதுரைக்குள் வருவார்.

இஸ்லாமியர்,கிறித்துவர்,ஜைனர்கள் என்ற வேறுபாடில்லாமல் சாதி,மதம் பேரமின்றி அனைவரும் ஶ்ரீகள்ளழகரை மதுரையில் காண வழி மேல் விழி வைத்து காத்திருந்து நிற்பார்கள்.

ஶ்ரீகள்ளழகர் சித்திரை திருவிழா இறுதியாக ஆற்றில் இறங்கும் முன் நரசிங்கப்பட்டி அம்பலகாரன் மண்டகப்படியில் தங்கிய பிறகு ஆற்றில் இறங்குகிறார்.

 அழகர் மலையை விட்டு ஶ்ரீகள்ளழகர் வெளிவந்தது முதல் இசை,நாட்டியம்,கூத்து,வானவேடிக்கை என அம்பலகாரர்களால் விழா சிறப்பிக்கப்படுகிறது.

மேலும் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் உள் கள்ளர் நாட்டார்களுக்கு சொந்தமாக மண்டபம் உள்ளது, ஆனால் இன்று அந்த மண்டபம் பிரசாதம் செய்யும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

முழுக்க,முழுக்க கள்ளர் தலைவர் ஶ்ரீகள்ளழகருக்கு கள்ளர் பெருங்குடி மக்களால் எடுக்கப்படும் பாரம்பரியமிக்க முன்னோர் வழிபாடு தான் இந்த ஶ்ரீகள்ளழகர் வழிபாடு👍

இந்த ஶ்ரீகள்ளழகரை பாதுகாத்து காவலுக்கு நிற்கும் கடவுளும் ஒரு கள்ளரே(பதினெட்டாம்படி கருப்பர்)

மதுரை மண்டலத்தில் தப்பு செய்தவர்கள் காவல்துறைக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, ஆனால்
யுத்த கோலத்தில் ஆங்கார சொருபமாய் நிற்கும் கருப்பன் பார்வைக்கு அஞ்சி நடுங்குவதை இன்றும் காணலாம்.

பெரும்பாலான மதுரை மண்டல கள்ளர்களுக்கு ஶ்ரீகள்ளழகரும்,கருப்பருமே குல தெய்வமாக உள்ளனர்.

ஆய்வு தொடரும்........!

நன்றி
நாலாயிர திவ்ய பிரபந்தம்
ஶ்ரீகள்ளழகர் தேவஸ்தானம்
மதுரை வீரன் அம்பானை
ஶ்ரீகள்ளழகர் தல வரலாறு (குருகுல பாடசாலை)
ethnographic notes in southern india

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்