Posts

Showing posts from May, 2024

மோகினி ஏகாதசி

Image
மோகினி ஏகாதசி: வைசாக மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர் - 19.5.2024 இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். விஷ்ணு பகவான் வைசாக மாத வளர்பிறை ஏகாதசியின் போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம். ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்

ஸ்ரீரங்கம்

Image
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!!! பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் இன்று 19/5/2024 புண்ணிய ஏகாதசி அன்று ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே ! பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யுமதால் லக்ஷ்மி இங்கே ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி தாங்கிடும் அற்புத கோலமிங்கே சந்திர சூரியர் நின்று வணங்கிட பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய ரங்க நாயகியின் சன்னிதியே அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே ரெங்கா ரெங்கா ரெங்கா !

கண்ணன் உணவு

Image
கண்ணன் உண்ணும் கணக்கு. சிறப்பு பதிவு பாரதப் போர் தொடங்கும் சமயம். பாரதத்திலுள்ள சில அரசர்கள் பாண்டவர் பக்கமும் சிலர் கெளரவம் பக்கமும் சென்றார்கள். உடுப்பி தேச ராஜா," நான் எந்தப் பக்கமும் சேரப் போவதில்லை. எல்லா போர் வீரர்களுக்கும் உணவு அளிப்பதை என் கடமையாக எடுத்துக் கொள்கிறேன். மகாபாரதப் போரில் பங்கெடுத்த கெளரவ பாண்டவ சேனை வீரர்களுக்கு உணவு ஒன்றாக பரிமாறப்பட்டது. தர்மருக்கும் கிருஷ்ணனுக்கும் உணவை பரிமாறுவது தனது கடமையென நினைத்தார் உடுப்பி தேசத்து ராஜா. ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்பதை உடுப்பி ராஜாவே கணக்கிட்டு சொல்வார். அதன்படி (பிரசாதம்) உணவு பொருட்கள் தயாரிக்கப் படும். கூடுதலாகவோ குறைவாகவோ என்றும் இருந்ததில்லை. கெளரவச் சேனை வீரர்கள் எல்லோரும் உணவு உண்ட பின் நேரே துரியோதனனிடம் சென்று ," நமது வீரர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டனர்" என்று சொல்வார்கள். அதே போல் தர்மர் தனது படை வீரர்களை அழைத்து," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டீர்களா? என்று விசாரிப்பார். வீரர்கள்," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டோம்!" என்பார்கள். இது தினப

நமசிவாய

Image
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும் ஐந்தின் பெருமையே ஆலய மாவதும் ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே.. பொருள் : விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆற்றலினால் இயங்கிக் கொண்டிருக்கிறது, நடராஐ சபை இருக்கும் இடம் நகாரமாகவும், பலிபீடம் இருக்கும் இடம் மகாரமாகவும், சிவலிங்கம் இருக்கும் இடம் சிகாரமாகவும், அடுத்த அர்த்த மண்டபம் வகாரமாகவும், நந்தி பீடம் இருக்கும் இடம் யகாரமாகவும், ஆலயங்கள் நமசிவாய மந்திரமாக இருக்கின்றது, நமசிவாய மந்திரத்தால், உள்ளாகி நெறி, தர்மங்கள் நிலைத்திருக்கிறது, நமசிவாய மந்திரத்தை ஓதி உணர்பவர்களை காக்கின்றவனும் சிவனே ஆவான்... ஓம் நமசிவாய...

அரசமரம்

Image
*ஒரு அரச மரம் ஒரு மணி நேரத்திற்கு 2240 கிலோ கரியமிலக்காற்றை உட்கொண்டு 1712 கிலோ சுத்தமான காற்றை கொடுக்கிறது. இம்மரம் 24 மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடும் ஆகையால் பொது இடங்கள் குளம் போன்ற இடங்களில் இம்மரம் வளர்ப்போம், வருங்காலத்தில் அயல்நாட்டில் கேனில் அடைக்கப்பட்ட சுத்தக்காற்று வாங்குவதை தவிர்ப்போம்.* *(மரம் நடுவோம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்)* *படித்ததில் பகிர்ந்தது*

யாளி

Image
யாளி... உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.? யாழிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாழி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாழி” என்றும், யானை முகத்தை “யானை யாழி” என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் “டைனோசர்” என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு த

தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் இடம் பெற்ற வரலாறு!

Image
தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் இடம் பெற்ற வரலாறு! ................................................... செந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில் சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக் கோயிலாகவே போற்றப் பெற்றுள்ளது. . வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர் திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும் பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே ஆனந்தக் கூத்து நிகழ்த்தியருளுதலால் தில்லைச் சிற்றம்பலம் எனவும் வழங்கப் பெறுவது இத்தில்லைப் பெருங்கோயிலாகும். . திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய முவரும் அருளிய தேவாரத் திருப் பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய திருமுறைகளும் தில்லைச் சிற்றம்பலத்தையே சிவ தலங்கலெல்லாவற்றிறும் முதன்மையுடையதாகக் கொண்டு 'கோயில்' என்னும் பெயராற் சிறப்ப