ஸ்ரீரங்கம்
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!!! பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே
முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் இன்று 19/5/2024 புண்ணிய ஏகாதசி அன்று ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே !
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே
காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே
காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட
ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே
ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக்
கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே
முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட
திக்கெட்டும் கேட்குது வேத கோஷம்
நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட
நாரதன் வீணையில் தேவகானம்
ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால்
நோகும் திருவடி என்றறிந்து
மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத
சேவை செய்யுமதால் லக்ஷ்மி இங்கே
ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி
தாங்கிடும் அற்புத கோலமிங்கே
சந்திர சூரியர் நின்று வணங்கிட
பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே
ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய
ரங்க நாயகியின் சன்னிதியே
அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ
என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே
ரெங்கா ரெங்கா ரெங்கா !
Comments
Post a Comment