கண்ணன் உணவு
கண்ணன் உண்ணும் கணக்கு. சிறப்பு பதிவு
பாரதப் போர் தொடங்கும் சமயம். பாரதத்திலுள்ள சில அரசர்கள் பாண்டவர் பக்கமும் சிலர் கெளரவம் பக்கமும் சென்றார்கள். உடுப்பி தேச ராஜா," நான் எந்தப் பக்கமும் சேரப் போவதில்லை.
எல்லா போர் வீரர்களுக்கும் உணவு அளிப்பதை என் கடமையாக எடுத்துக் கொள்கிறேன். மகாபாரதப் போரில் பங்கெடுத்த கெளரவ பாண்டவ சேனை வீரர்களுக்கு உணவு ஒன்றாக பரிமாறப்பட்டது.
தர்மருக்கும் கிருஷ்ணனுக்கும் உணவை பரிமாறுவது தனது கடமையென நினைத்தார் உடுப்பி தேசத்து ராஜா.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்பதை உடுப்பி ராஜாவே கணக்கிட்டு சொல்வார். அதன்படி (பிரசாதம்) உணவு பொருட்கள் தயாரிக்கப் படும். கூடுதலாகவோ குறைவாகவோ என்றும் இருந்ததில்லை.
கெளரவச் சேனை வீரர்கள் எல்லோரும் உணவு உண்ட பின் நேரே துரியோதனனிடம் சென்று ," நமது வீரர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டனர்" என்று சொல்வார்கள்.
அதே போல் தர்மர் தனது படை வீரர்களை அழைத்து," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டீர்களா? என்று விசாரிப்பார். வீரர்கள்," எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டோம்!" என்பார்கள்.
இது தினப்படி நடக்கும் விஷயமாகி விட்டது. தர்மருக்கு இது ஒரு ஆச்சரியமான விஷயமாகப் பட்டது. அது எப்படி சரியான கணக்காக சாப்பாடு தயாரிக்க முடிந்தது ?அவருக்கு அது ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
நேரே சமையல் கூடம் சென்றார். அங்கு பணி புரிந்து கொண்டிருந்த சமையற்காரர்களைப் போய் கேட்டார். இது நாள் வரை எந்த வீரரும் பட்டினியில்லை! அனைவருக்கும் சரியாக சாப்பாடு போடப் படுகிறது! இது எப்படி ? புரியாத புதிராக இருக்கிறதே! எங்ஙனம் பாண்டவர்கள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்களைக் கணக்கிடுகிறார்கள்? ஒரு நாள் எங்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்! மறுநாள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகம்! இதைக் கணக்கிடுவது கடினம் அன்றோ! என்றார்.
அதற்கு பணியாட்கள்," எங்கள் மன்னன் தான் இன்று இத்தனை பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்வார். நாங்கள் அதன்படி தயாரிப்போம்!" என்றனர். தர்மர் முதலில் இந்த சந்தேகத்தை கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணரோ," இதை நீ நேரிடியாக உடுப்பி மன்னனிடமே போய் கேள்!" என்றார்.
தர்மர் உடுப்பி அரசனைக் காணச் சென்றார். அவரிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்.
அவரும் மிகவும் பவ்வயமாகவும் அமைதியாகவும்," தர்மரே! தாங்களும் கிருஷ்ணனும் தினமும் ஒன்றாக தானே உண்ண வருவீர்கள் அல்லவா?என்று கேட்டார்."ஆமாம் ஆமாம்!" என்றார் தர்மர்.
பின் ,"உங்களுக்கும் கிருஷ்ணனுக்கும் நானே எனது கரத்தால் உணவை பரிமாறுவேன் அல்லவா? " என்றார் உடுப்பி அரசன்.அதற்கும் தர்மர்," ஆமாம் !"என்று தலை அசைத்தார்.
அப்போது நான் கிருஷ்ணன் சாப்பிடும் கவளங்களை கணக்கெடுப்பேன்.
ஒரு கவளத்துக்கு* *ஆயிரம் பேர் என எடுத்துக் கொள்வேன்! இதில்* *சிறு சிறு பருக்கைகளையும்* *சேர்த்துத்தான்!* *அதை வைத்துக் கொண்டு அடுத்த நாள் போரில்* *இத்தனை ஆயிரம் பேர் மடிவார்கள்* *என்று கணக்கிட்டு மீதியுள்ள வீரர்களுக்கு தயார் செய்வேன்! இது எனக்கும் கிருஷ்ணனுக்கும் உண்டான கணக்கு வழக்கு! ரகசியம் பரமரகசியம்!"
என்றார் உடுப்பி மன்னன்.
தர்மர் நேரே கிருஷ்ணனிடம் சென்றார். தர்மர், கண்ணனைத் கண்டவுடன் மண்டியிட்டு ," *கிருஷ்ணா! நீதான் இந்த போரில் ஒவ்வொரு நாளும்* எவ்வளவு பேர் இறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறாய்!"* *நாங்கள் எல்லாம்* *வெறும் பொம்மைகள்!"*
என்று விழுந்து வணங்கினார்.
சான்றோர்களின் வாக்குப் படி,"* *பகவானின் கருணையாலும் கட்டளையாலும் தான் நாம் வளர்கிறோம்! *வாழ்கிறோம்! பகவான் அருளால் தான் ஒரு முனைப் புல் கூட முளைக்கும்.
நமது கையில் ஒன்றுமில்லை!* *பகவான் எல்லாவற்றையும்* *தீர்மானித்து செயல் புரிகிறான்!*நமது புத்திசாலி*
*தனத்தாலோ* *புலமையினாலோ* *நிர்வாகத் திறமையினாலோ* *இவையெல்லாம் செய்ய முடியாது.
பகவானே காரணமும் கர்த்தாவும்.நாம், அவனால் ஆட்டிப் படைக்கப்படும் பொம்மைகள்!நமக்கு அதிகாரமுமில்லை அதனால் ஆணவமும் தேவையில்லை! இதை உணர்வது கடினம்.ஆனால் உணர வேண்டும்.
எல்லாம் ஸ்ரீ
கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்.
Comments
Post a Comment