நமசிவாய
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே..
பொருள் : விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆற்றலினால் இயங்கிக் கொண்டிருக்கிறது, நடராஐ சபை இருக்கும் இடம் நகாரமாகவும், பலிபீடம் இருக்கும் இடம் மகாரமாகவும், சிவலிங்கம் இருக்கும் இடம் சிகாரமாகவும், அடுத்த அர்த்த மண்டபம் வகாரமாகவும், நந்தி பீடம் இருக்கும் இடம் யகாரமாகவும், ஆலயங்கள் நமசிவாய மந்திரமாக இருக்கின்றது, நமசிவாய மந்திரத்தால், உள்ளாகி நெறி, தர்மங்கள் நிலைத்திருக்கிறது, நமசிவாய மந்திரத்தை ஓதி உணர்பவர்களை காக்கின்றவனும் சிவனே ஆவான்... ஓம் நமசிவாய...
Comments
Post a Comment