அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம். புராண வரலாறு இத்தலத்தின் புராண வரலாற்றில் இங்கே வந்து வழிபடாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு சிவலோகமே திரண்டெழுந்து வணங்கிய புண்ணியத் தலம் திட்டை. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்றதும், வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறுபெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும், யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும், சனி நவக்கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றதும, திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல இறைவனின் அருளால்தான் எனப்படுகின்றது. அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர். நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற