அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
புராண வரலாறு
இத்தலத்தின் புராண வரலாற்றில் இங்கே வந்து வழிபடாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு சிவலோகமே திரண்டெழுந்து வணங்கிய புண்ணியத் தலம் திட்டை. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்றதும், வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறுபெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும், யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும், சனி நவக்கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றதும, திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல இறைவனின் அருளால்தான் எனப்படுகின்றது. அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர். நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற ஊர் தென்குடித் திட்டை. இதை முன்னை நான்மறையவை முறை முறை குறையொடும் தன்னைதான் தொழுதெழ நின்றவன் என்ற திருஞான சம்பந்தர் வாக்கில் காணமுடிகிறது. நவகிரகங்கள் ஒன்றுகூடி இறைவனை வணங்கிய தலம், சனி பகவானுக்கு பரிகாரம் செய்யவும் உகந்த தலம். "ஒம் கம் நம்ஹ பிதாமகாயஞ" என்ற நவா க்ஷர மந்திரத்தை அகத்திய முனிவர் உபதேசித்த புண்ணிய தலம்.
திருக்கோயில் அமைப்பு
ஞானக்கோயில் எனப்படும் இக்கோயிலின் அமைப்பே அலாதியான சோபையுடன் காணப்படுகிறது. எங்கும் கருங்கற் திருப்பணியாகவே இருக்கிறது. மூலவர் விமானம், அம்பிகை விமானம், என்றில்லாமல் விநாயகர், முருகன், நடராஜர், பைரவர், தேவகுரு என்று எல்லா பரிவார தெய்வங்குளுக்கும் கருங்கல் விமானம் அமைந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத, இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு, இத்திருக்கோயிலில் சுதை வேலைபாடுகளே இல்லை, பொரும் பொருட்செலவில் முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்ட கோயில் இது, கட்டிடக்கலைக்கு முக்கிய எடுத்துக்காட்டு இக்கோயில். சூரிய, சந்திர காந்தக் கற்கலால் கட்டப்பட்டது இக்கோயில், இக்கற்கள் சூரிய ஔயினிரல் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, கல்லிலிருந்து ஈரத்தை நீராக மாற்றி சிவனுக்கு இருபது நிமிடத்திற்கு ஒரு முறை அபிஷேகம் செய்கிறது. கற்களுக்கு அற்புத குணங்கள் உண்டு என்பதை விஞ்ஞானப் பூர்வமா உணர்த்தும் ஒரே தலம் திட்டை. கருவறையில் உள்ள மூல லிங்கம் தவிர கோயிலின் நாற்றிசை திருச்சு ற்றுகளிலும் நான்கு சிறந்த சிவலிங்க வடிவங்கள் காணப்பெறுகின்றன. இதன் காரணமாக இத்தலம் பஞ்சலிங்க கேத்திரம் எனப்படுகிறது. இவற்றில் ஒரு லிங்கம் 32 பட்டை வடிவில் காணப்பெறுகிறது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் கீழ்பாகம் சதுரமாக காட்சி அளிக்கிறது.
தலவரலாறு
இத்தலம் தஞ்சாவூர் வட்டம், பள்ளி அக்ரஹாரத்திலிருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் தென்குடித் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது இது திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும். காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற சிறப்புமிக்கத் தலம். திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். மேடு என்பதை ஞானமேடு என்றும் பொருள்கொள்ள லாம். ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மும்மூர்த்திகளும் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டு நீழ் சூழ்ந்தும். இருள் கவிழ்ந்தும் இருந்த இந்த பிரமாண்டத்தைப் பார்த்து அஞ்சினர். பரம்பொருளைள பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் ஊழிப்பெருவௌ்ளத்தின் நடுவே மேருமலைக்குத் தென்புறம் 10 மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப் பகுதியில் ஜோதிமயமானம காலிங்கத்தைக்கண்டு பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளுக்கும் அபயமளித்து படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் அதற்கான சக்கி பெறும் அறிவையும் அவர்களுக்கு அருளினார்.
அழியா ஸ்தலம்
ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல ஸ்லங்கள் மீண்டும் பிரளயத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் இத்தலம் மட்டும் இன்றளவும் அழியாமல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது.ஊழிக்காலத்திலும் அழியாதபெருமை உடையது இத்தலம்.
பஞ்சலிங்க ஸ்தலம்
கயிலாயம்,கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசை 22 வது ஸ்தலமாக விளங்குவது தென்கு டித் திட்டை. இத்திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். எனவே பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக உள்ளது. திருக்காளத்தி திருஅண்ணாமலை, திருவானைக்கோயில், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற பஞ்சபூத ஸ்தலங்களும் ஒருங்கிணைந்த ஸ்தலமாக தென்குடித்திட்டை அமைந்துள்ளது. நவகோள்களில் மூன்று கிரகங்கள் இத்தல வரலாற்றில் இணைத்துப் பேசப்படுகின்றன. நவக்கிரகங்களின் தலைவனான சூரியன் சிவபக்தரான சுமாலியைக் கொன்றதால், பாவம் வருமே என்று பயந்து இத்திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரைப் பூஜித்து கடுந்தவம் புரிந்தான். இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி நவக்கிரங்களின் அதிபதியாகவும் காலச்சரக்கரத்தை நடத்திச் செல்ல வும் அருள் புரிந்தார்.---------திட்டைத் திருத்தலத்தில் மூலவர் வசிஷ்டேஷ்வரரின் விமானத்தில் சந்திரகாந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்துக்கட்டப்பட்டுள்ளது.திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்குத் திட்டையில் சந்திரன் தன் நன்றிக்கடனை செலுத்துகிறார்.எப்படியென்றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.24 நிமிடங்களுக்கு[ஒரு நாழிகை] ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.-----------
திருவிழாக்கள்
இத்தலத்தில் சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வருடந்தோறும் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment