Posts

Showing posts from July, 2017

ரீபைண்ட் ஆயில்

Image
ரீபைண்ட் ஆயில்( Refined oil)  - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது

பண்டார வன்னியன்

Image
பண்டார வன்னியன்" என்ற ஈழத்து அரசனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்காக திரு வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தை மேற்கோள் காட்டி "பண்டார வன்னியன்" கள்ளர் நாடு என்று அழைக்கப்படும் தஞ்சை பகுதி ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்து சென்றவன் என்றும், அவர் தஞ்சை கள்ளர் குலத்தில் மிக முக்கியமான பட்டமான "வன்னியர் " பட்டத்தை தரித்தவன் என்றும் காட்டுகிறார் (குறிப்பு : இப்போது இருக்கிற தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் தலைவரும் வன்னியர் என்ற பட்டம் கொண்டவர், அவர்  டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H ).   பண்டார  வன்னியனின்  தங்கையையும் காதலியையும் நாச்சியார் என்று காட்டுகிறார் கலைஞர் கூறுமிடத்தே   "பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்". கலைஞர் அவர்களை பற்றி நமக்க

தமிழ் திருமகன் லதான் சுந்தரலிங்கம்

Image
ஐக்கிய ஐரோப்பிய நீதிமன்றத்தில் போராடி புலிகளு க்கான தடையை உடைத்த, "தமிழ் திருமகன் லதான் சுந்தரலிங்கம்" அவர்களுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றோம்...

பறவை நாச்சியார்

Image
அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ