அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையார் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகி றது. இவ்வடிவின் அடியைக் காண திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று முடியைக் காண சென்றார். நெடுகாலம் பயணம் செய்தும் இலிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்த இடமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. இத்தலத்த