Posts

Showing posts from October, 2017

தேவரின் பெருமை

Image
👉தேவர் பிறந்தது மறவர் சமூகம், 👉தேவர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள், 👉தேவரை பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார்கள், 👉தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம், 👉தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம், 👉தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாயக்கர் சமூகம், 👉தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர், தேவரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர், 👉தேவரை பற்றி முதன்முதலில் பாடல் எழுதியவர் நாடார் சமூகத்தவர், 👉தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம், 👉தேவரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர், 👉தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடியது பர்மா மக்கள், 👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் தேவருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர், 👉தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர் 👉பாராளுமன்றத்தில் தேவர் சிலையை நிறுவ சொன

சோற்றுநீர்

Image
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! "ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே.... இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது. ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் ஆமாங்க! ஆறும், அரு

நாடாண்ட மறவர் கூட்டம்

Image
நாடாண்ட மறவர் கூட்டம்::-----தலக்காவல்,நாடு காவல்,திசைக்காவல் என்ற அறப்புறங்காவல் முறையிலே தமக்குரிய நாட்டை ஆண்டு வந்தவர்கள் மறவர் கூட்டம்.குறு நில மன்னர்களாக ராமநாதபுரம்,சிவகங்கை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான்,நெற்கட்டும் செவ்வல்,தலைவன் கோட்டை சொக்கன் பட்டி,குருக்கள் பட்டி ,சிங்கம்பட்டி,ஊத்துமலை,அழகா புரி,நடுவக்குறிச்சி, சுரண்டை,ஊர்க்காடு,மணியாச்சி,கடம்பூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களை ஆண்டனர்.1782 ல்  திருக்கரங்குடியில் கோட்டை கட்டி வாழ்ந்தவர் சிவராமத்தலைவர் எனும் பாளையக்காரர்.மறவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த தலைவர்.இவருக்குப்பிறகு இவரது வழியினரே தலைவர் என அழைக்கப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தில் இன்றும் காணலாம்.ராமநாதபுர மன்னர்களுக்கு செம்பி நாடன் என்றும்,சேற்றூருக்கு சோழகர் என்றும்,விக்கிரம சோழன் என்றும்,கொல்லங்கொண்டார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் காணும் போது இவர்கள் ஆதிகாலத்தில் கள்ளர்கள் என தெரிகிறது.1799 ல் 2113 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் 1635 கிராமங்கள் மறவர்களுக்கு சொந்தம். கி பி 1059 ல் இலங்கைக்கு படையெடுத்து சென்றான் ராஜ ராஜ சோழன்.அன்று தனக்கு உதவிக்காகவும் நாட்டைப்பாதுக

குருபூஜைவிழா - ஜெயந்தி விழா

Image
குருபூஜைவிழா  - ஜெயந்தி விழா ? குருபூஜைவிழா  - தேவர் திருமகன் மதுரையில் மரணமடைந்தபோது அவரது உடல் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது .அங்கு வல்லநாட்டு சித்தர் கரங்களால் இந்து சமய முறைப்படி இறுதிசடங்குகள் நடைபெற்றது .பின்பு பசும்பொன் தேவர் வீட்டின் முன்பாக பத்துக்கு பத்துஅடி நீள அகலமுள்ள குழி வெட்டப்பட்டு  அதில் வேப்பிலை திருநீறு சுக்கான் போன்ற பதினெட்டு வகையான மூலிகைகள் பரப்பப்பட்டு தேவரின் உடல் பத்மாசனநிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அடக்கம்செய்யப்பட்டது . அதிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மண்டலம் 41 நாட்கள் விளக்குபூஜை நடத்தப்பட்டது .மேலும் சித்தவித்தையில் உள்ளவர்களுக்கு நைஸ்டீக பிரம்மச்சாரியாக [ தூக்கத்தில் கூட தன்னிலை தவறாதவர்கள் நைஸ்டீக பிரம்மச்சாரிகள்] வாழ்ந்தவர்களுக்கு அவரது சீடர்களால் நடத்தப்படும் பூஜையே "குருபூஜையாகும் " இல்லறவாழ்வில் ஈடுபட்டவர்கள் கிருஸ்தவமதத்தை சேர்ந்தவர்கள் கள்ளக்காதலில் வெட்டுப்பட்டு செத்தவர்களுக்கெல்லாம் குருபூஜை நடத்தும்  அக்கிரமம் இங்குதான் அரங்கேறுகிறது . ஜெயந்தி விழா -  இந்திய நாட்டின் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தி பிறந்த த

மழவராயர்

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" திருப்பரங்குன்றம் கல்வெட்டுகளில் திசைக்காவல்-'மழவராயர்' பிரமலைக் கள்ளர் மரபினரே. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மழவராயர் ஒருவர் திருப்பரங்குன்றம் கோயிலின் பாடிக்காப்பாளன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.இதைப்பற்றிய கல்வெட்டு செய்தி இதுவே. இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ). திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின

சேரமான் கணைக்கால் இரும்பொறை

Image
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது. குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார் தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ் உலகத்தானே? பிறந்ததும் குழந்தை இறந்துவிட்டாலும், பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும் அந்தப் பிறவிக் குழந்தை ஆள் அன்று என்று எண்ணி அதனை வாளால் காயப்படுத்துவர். இப்போது நான் காயமில்லாமல் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கிறேன். நான் ஆண்மகன் ஆவேனா? அன்றியும் என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா? (உண்ணக்கூடாது என்று எண்ணி நீரையும் உண்ணாமல் கிடந்

சேரன் செங்குட்டுவன்

Image
சேரன் செங்குட்டுவன்  கி.பி. 129-184-----சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து, பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மணக்கிள்ளி என்பது இவன் தாயின் பெயர். இப் பெயர் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான். சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி இயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தான் என்றும், வஞ்சியில் இருந்துகொண்டு ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறது. காலம் இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையி

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

Image
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்  கி.பி. 106-130-----களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.  பதுமன் தேவி வேள் அரசனின் மகள். களங்காய்க்கண்ணி விளக்கம்     களாக்காய் போன்ற கருநிற மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில் வைத்துத் தைத்துச் செய்த மாலை. இந்த மாலையை இவன் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்) அணிந்துகொண்டிருந்தான்.     எழுமுடி மார்பன் பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய

பல்யானைச் செல்கெழு குட்டுவன்

Image
பல்யானைச் செல்கெழு குட்டுவன், சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோ

திருவனந்தபுரம்ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்

Image
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது. இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து , பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழ

திருவஞ்சிக்குளம்

Image
திருவஞ்சிக்குளம் ( ஆங்கிலம்: Thiruvanchikulam )அல்லது வஞ்சி, கேரளாவின் கொடுங்கல்லூரை அடுத்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராகும். இது 12வது நூற்றாண்டுவரை சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் கொச்சி இராச்சியத்தின் அரசாட்சியில் இருந்தது. இங்குள்ள மகாதேவசுவாமி ஆலயம் சுந்தரர் பாடிய தலமாகும்.இக்கோவில் சிதம்பரம் கோவிலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சங்கக்காலப் பாடலான பதிற்றுப்பத்து 48 பெரியாற்றின் கரையில் அமைந்த வஞ்சி மாநகரின் எதிர்கரையில் இருந்த காஞ்சி மரங்கள் அடர்ந்த காஞ்சியம் பெருந்துறையில் சேரன் செங்குட்டுவன் கொண்டாடிய வேனில் விழாவைக் குறிப்பிடுகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

Image
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்  கி.பி. 71-129-----இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியம் பதிற்றுப்பத்து. இதில் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை.     இமய மலையில் வில்லைப் பொறித்தான்.]     கடம்பரின் காவல்மரமான கடம்பு மரத்தை வெட்டி, அம் மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான்     தமிழகம் முழுவதும் ஆண்டான்     இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட அரசர்கள் தன்னைப் புகழ்ந்த திறத்தை அடக்கினான்.     யவனரின் செல்வத்தையும், வயிரத்தையும் கைப்பற்றித் தன் ஊருக்குக் கொண்டுவந்து பிறருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை இழுத்துவந்த

ஆதிச்சநல்லூர்

Image
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு..கீழடி ஆராய்ச்சி தொடரவேண்டும்.... தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கி

ராஜராஜ சோழன் வரலாறு...

Image
ஸ்ரீஇராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு நடத்தும் 1032-வது சதயத் திருவிழா நாட்கள் 29, 30 அக்டோ.2017    இராஜராஜ சோழனின் சிறு வரலாற்றுக் குறிப்புகள் இந்திய வரலாற்றிலேயே ஈடு இணையற்ற பெரு வேந்தராக சோழப்பேரரசை ஆண்ட ஸ்ரீ இராஜராஜ தேவர்(கிபி.985-1014), கிபி.943ஆம் ஆண்டு, ஐப்பசித் திங்கள் , சதய நட்சத்திர நன்னாளில்,இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழ தேவருக்கும் (957-970) திருக்கோயிலூர் மலையமான் சேதுராயர் மகளான வானவன் மாதேவிக்கும், திருக்கோயிலூர் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன்  என்ற பெயர் வழக்கிழந்து, அவர் குடும்பப் பெயரான தேவர் பட்டத்துடன் இயல்பாக அருண்மொழித் தேவன் என்ற பெயரே யாண்டும் எங்கும் வழங்கிவந்து, அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராக  நிலைபெற்றது. இவருடைய தமையனான இளவரசர் ஆதித்த கரிகாலன் கிபி.969ல் பாண்டியனின் ஆபத்துதவிகளான சோமன், இரவிதாசன்,  பரமசிவன்,ரேவதாசன் ஆகிய நான்கு பிராமண சகோதரர்களால் நயவஞ்சக மாக படு கொலை செய்யப்பட்டார்.  தன் மூத்த மகனின்  அகல மரணத்தால் ஆற்றொணாத் துயரத்தில்  மூழ்கிய தந்தை  சுந்தர  சோழ தேவர் மீளாத்துயரில் பொன்மாள

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

Image
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்-----கி.பி. 45-70----- சங்க காலச் சேர மன்னன். கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். மேலும் பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும்

வட்டெழுத்து

Image
வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தில் இருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை பல்லவ எழுத்துமுறை எனவும் கூறுவர்-----இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு

திருச்சூர் அருள்மிகு வடக்கு நாதர்

Image
அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்--------- திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.   தல சிறப்பு:  இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்' என அழைக்கிறார்கள்.