ராஜராஜ சோழன் வரலாறு...

ஸ்ரீஇராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு நடத்தும் 1032-வது சதயத் திருவிழா நாட்கள் 29, 30 அக்டோ.2017

   இராஜராஜ சோழனின் சிறு வரலாற்றுக் குறிப்புகள்

இந்திய வரலாற்றிலேயே ஈடு இணையற்ற பெரு வேந்தராக சோழப்பேரரசை ஆண்ட ஸ்ரீ இராஜராஜ
தேவர்(கிபி.985-1014), கிபி.943ஆம் ஆண்டு, ஐப்பசித் திங்கள் , சதய நட்சத்திர நன்னாளில்,இரண்டாம்
பராந்தகனான சுந்தர சோழ தேவருக்கும் (957-970) திருக்கோயிலூர் மலையமான் சேதுராயர் மகளான
வானவன் மாதேவிக்கும், திருக்கோயிலூர் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெற்றோர்கள்
சூட்டிய அருண்மொழி வர்மன்  என்ற பெயர் வழக்கிழந்து, அவர் குடும்பப் பெயரான தேவர் பட்டத்துடன்
இயல்பாக அருண்மொழித் தேவன் என்ற பெயரே யாண்டும் எங்கும் வழங்கிவந்து, அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராக  நிலைபெற்றது.

இவருடைய தமையனான இளவரசர் ஆதித்த கரிகாலன் கிபி.969ல் பாண்டியனின் ஆபத்துதவிகளான
சோமன், இரவிதாசன்,  பரமசிவன்,ரேவதாசன் ஆகிய நான்கு பிராமண சகோதரர்களால் நயவஞ்சக
மாக படு கொலை செய்யப்பட்டார்.  தன் மூத்த மகனின்  அகல மரணத்தால் ஆற்றொணாத் துயரத்தில்
 மூழ்கிய தந்தை  சுந்தர  சோழ தேவர் மீளாத்துயரில் பொன்மாளிகையில் உயிர்துறந்து, பொன்மாளிகை
துஞ்சிய தேவர் என பெயர் பெற்றார். தன் கணவனின் பிரிவையும் மூத்த மகனின் பிரிவையும் ஒருங்கே
தாங்க முடியாத பெருந்துயரத்தால், சேதுராயர் மகளான வானவன் மாதேவி தன் கணவனின் உடல்
எரிகின்ற தீயில் விழுந்து உடன்கட்டை ஏறினாள்.  அரசனை இழந்துவிட்ட சோழ நாடு, வடக்கே இராட்டிர
கூடர்களாலும், தெற்கே பாண்டியனாலும் எந்த நேரத்திலும் படையெடுத்துவந்து கபளீகரம் செய்யப்படும்
அபாய நிலையில் இருந்தது.

இந்நிலையில், கிபி.970ல்  பெருவீரரானஇளவரசர் அருண்மொழித்  தேவனே சோழப்பேரரசராக முடிசூடி
சோழ நாட்டை ஆள வேண்டும்  என அனைவரும் விரும்பி, அவரை வற்புறுத்தினர்.  ஆனால், அருண்
மொழித் தேவரோ, முடியாட்சியில் மூத்தவருக்கே முன்னுரிமையாதலால், தன்னைவிட மூத்தவரான
தன் சிறிய தந்தை மதுராந்தகத் தேவரே சோழ அரியணை ஏற முன்னுரிமை உடையவர் எனக்கூறி
தனக்கு அரிதில் கிடைத்த சோழப்பேரரசை அவருக்கே விட்டுக்கொடுத்து, அவரை சோழச்
சிம்மாசனத்தில் அமரவைத்து,  தன்கைகளாலேயே அவருக்கு முடிசூட்டி உத்தம சோழ தேவர் என்ற
அபிஷேகப் பெயரும் சூட்டி, மனம் மகிழ்ந்ததுடன், தன் சிறிய தந்தை இருக்கும்வரை சோழ நாட்டை
மனதால்கூட  தீண்டமாட்டேன் என்று அறிவித்தார். இவ்வித அற்புத நிகழ்வை புராணங்களிலும்
இதிகாசங்களிலும்கூட காண முடியாது. இவ்வித அற்புத நிகழ்வை கிபி.970ல் தஞ்சைத் தலைநகரம்
கண்டுகளித்து, அருண்மொழித் தேவனின் குண நலன்களை குடிமக்கள் அனைவரும் மனம்குளிரப்
பாராட்டி பெரிதும் மகிழ்ந்தனர்.     மேலும், அருண்மொழித்தேவன் தன் சிறிய தந்தையின் கீழ்
மாதண்ட நாயகனாக பொறுப்பு ஏற்று பகைவர்கள் சோழ நாட்டின் மீது படையெடுக்காதவாறு
நாட்டைப் பாதுகாத்துவந்தார் . இந்த வரலாற்றின் மூலம் மலையமான் வம்சத்தினர்..வேளிர்குல
கடைஎழு வள்ளல்களில் ஒருவரான திருமுடிக்காரியின் வழி
தோன்றலான திருக்கோயிலூர் மலையமான் சேதுராயர் மகள்
வயிற்றில் பிறந்தவரே..இராஜராஜ சோழன் என்பதால், மலைய
மான் வம்சத்தினர் தங்களை.. சோழ மலையமான் வழிதோன்றல்
என்றோ..செம்பியன் மலையமான் வழிதோன்றல் என்றோ
குறிப்பிடலாம். நற்றிணை 291ஆவது பாடல் திருமுடிக்காரியை
ஆநிரைகளைக் கவர்ந்து வந்த கள்வர் என்றே குறிப்பிடுவதால்
சோழ மலையமான்..கள்வர் குலத்தினரே ஆவர். வரலாறு அறிந்த
வர்கள் இதை நன்கு அறிவர்....சம்பந்தமூர்த்தி மழவராயர்                                                        

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்