திருவஞ்சிக்குளம்


திருவஞ்சிக்குளம் ( ஆங்கிலம்: Thiruvanchikulam )அல்லது வஞ்சி, கேரளாவின் கொடுங்கல்லூரை அடுத்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராகும். இது 12வது நூற்றாண்டுவரை சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் கொச்சி இராச்சியத்தின் அரசாட்சியில் இருந்தது. இங்குள்ள மகாதேவசுவாமி ஆலயம் சுந்தரர் பாடிய தலமாகும்.இக்கோவில் சிதம்பரம் கோவிலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

சங்கக்காலப் பாடலான பதிற்றுப்பத்து 48 பெரியாற்றின் கரையில் அமைந்த வஞ்சி மாநகரின் எதிர்கரையில் இருந்த காஞ்சி மரங்கள் அடர்ந்த காஞ்சியம் பெருந்துறையில் சேரன் செங்குட்டுவன் கொண்டாடிய வேனில் விழாவைக் குறிப்பிடுகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்