குருபூஜைவிழா - ஜெயந்தி விழா

குருபூஜைவிழா  - ஜெயந்தி விழா ?

குருபூஜைவிழா  -

தேவர் திருமகன் மதுரையில் மரணமடைந்தபோது அவரது உடல் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது .அங்கு வல்லநாட்டு சித்தர் கரங்களால் இந்து சமய முறைப்படி இறுதிசடங்குகள் நடைபெற்றது .பின்பு பசும்பொன் தேவர் வீட்டின் முன்பாக பத்துக்கு பத்துஅடி நீள அகலமுள்ள குழி வெட்டப்பட்டு  அதில் வேப்பிலை திருநீறு சுக்கான் போன்ற பதினெட்டு வகையான மூலிகைகள் பரப்பப்பட்டு தேவரின் உடல் பத்மாசனநிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அடக்கம்செய்யப்பட்டது .

அதிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மண்டலம் 41 நாட்கள் விளக்குபூஜை நடத்தப்பட்டது .மேலும் சித்தவித்தையில் உள்ளவர்களுக்கு நைஸ்டீக பிரம்மச்சாரியாக [ தூக்கத்தில் கூட தன்னிலை தவறாதவர்கள் நைஸ்டீக பிரம்மச்சாரிகள்] வாழ்ந்தவர்களுக்கு அவரது சீடர்களால் நடத்தப்படும் பூஜையே "குருபூஜையாகும் "

இல்லறவாழ்வில் ஈடுபட்டவர்கள் கிருஸ்தவமதத்தை சேர்ந்தவர்கள் கள்ளக்காதலில் வெட்டுப்பட்டு செத்தவர்களுக்கெல்லாம் குருபூஜை நடத்தும்  அக்கிரமம் இங்குதான் அரங்கேறுகிறது .

ஜெயந்தி விழா -

 இந்திய நாட்டின் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தி பிறந்த தினத்தை அவரை பின்பற்றுபவர்கள் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடினர் .

அதே காலத்தில் வாழ்ந்த காந்திக்கு நிகரான தலைவராக கருதப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை அவரை பின்பற்றியவர்கள் நேதாஜி ஜெயந்தி என்று கொண்டாடினர் .

அவரின் நெருங்கிய சகோதரனாக விளங்கிய தேவர் திருமகன் தனது வாழ்நாள் முழுவதும் நேதாஜி ஜெயந்தியை கொண்டாடி வந்தார் அதன் அடிப்படையில் தேவரை பின்பற்றுபவர்கள் தேவரின் பிறந்தநாளை தேவர் ஜெயந்தியை என இன்றுவரை கொண்டாடிவருகின்றனர் .

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்