நாடாண்ட மறவர் கூட்டம்
நாடாண்ட மறவர் கூட்டம்::-----தலக்காவல்,நாடு காவல்,திசைக்காவல் என்ற அறப்புறங்காவல் முறையிலே தமக்குரிய நாட்டை ஆண்டு வந்தவர்கள் மறவர் கூட்டம்.குறு நில மன்னர்களாக ராமநாதபுரம்,சிவகங்கை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான்,நெற்கட்டும் செவ்வல்,தலைவன் கோட்டை சொக்கன் பட்டி,குருக்கள் பட்டி ,சிங்கம்பட்டி,ஊத்துமலை,அழகா புரி,நடுவக்குறிச்சி, சுரண்டை,ஊர்க்காடு,மணியாச்சி,கடம்பூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களை ஆண்டனர்.1782 ல் திருக்கரங்குடியில் கோட்டை கட்டி வாழ்ந்தவர் சிவராமத்தலைவர் எனும் பாளையக்காரர்.மறவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த தலைவர்.இவருக்குப்பிறகு இவரது வழியினரே தலைவர் என அழைக்கப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தில் இன்றும் காணலாம்.ராமநாதபுர மன்னர்களுக்கு செம்பி நாடன் என்றும்,சேற்றூருக்கு சோழகர் என்றும்,விக்கிரம சோழன் என்றும்,கொல்லங்கொண்டார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் காணும் போது இவர்கள் ஆதிகாலத்தில் கள்ளர்கள் என தெரிகிறது.1799 ல் 2113 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் 1635 கிராமங்கள் மறவர்களுக்கு சொந்தம். கி பி 1059 ல் இலங்கைக்கு படையெடுத்து சென்றான் ராஜ ராஜ சோழன்.அன்று தனக்கு உதவிக்காகவும் நாட்டைப்பாதுகாக்கவும் நம்பிக்கை யானவர்களை சேது அணைக்குக் காவலர்களாக நிறுத்திச்சென்றான்.வெற்றி பெற்றுத் திரும்பியவன் தனக்கு உதவிய சிற்றசர்களுக்கு செம்பியன் எனும் பட்டத்தை சூட்டினான்.இவர்களே சேதுபதி மன்னர்கள்.எதிரிகளைத்தாக்கும் 18 அடி நீளம் உள்ள ஈட்டிகளை கையாளும் விதமும் அவர்களது வாள் வீச்சும் எதிரிகளை வெருண்டோடச்செய்யும். தேர்ப்படை,யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை இருந்ததாகவும்,அவர்கள் சொந்தத்தில் நாணயங்கள் வெளியிட்டிருந்தனர் எனவும் செப்பேடுகள் மூலம் அறியலாம். கி பி 1606 ல் ஆண்ட ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் 107 செப்பேடுகளில் 35 செப்பேடுகள் ராமேஸ்வரம் கோயிலைப் பற்றிக் கூறுகின்றன.--------நன்றி-- இனச்சுடர்-- ஜூலை 2013--வெளியீடு --பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை-- கோவை
Comments
Post a Comment