ராஜேந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன்
ரா ஜே ந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன் தஞ்சை இனியும் தலைநகராக இருப்பதற்குண்டான தகுதியுடையதாக இல்லை. தெற்கே பாண்டியர்கள், சேரர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அந்த இடத்தை ராஜேந்திர சோழனின் மகன்கள் மன்னராக பதவியேற்று ஆட்சி செய்கிறார்கள். வடக்கே கீழை சாளுக்கியம் என்று அழைக்கப்படுகின்ற ஆந்திர மாநிலம் மிக இணக்கமாக இருக்கிறது. ஆனால் வடமேற்கே இருக்கின்ற இப்பொழுது கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்ற மேலை சாளுக்கியம் இடையறாது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கு நடுவே தடுப்பணை ஏற்படுத்த அவர்கள் முற்படுகிறார்கள். அல்லது படையெடுத்து வந்து திருவொற்றியூர் வழியாக மயிலை திருவல்லிக்கேணியை தாக்குகிறார்கள். தொண்டை நாடு அவதிப்படுகிறது. தொண்டை நாட்டிற்கு கீழே உள்ள நடுநாடு விரைவில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகரை மாற்ற விரும்புகின்றான். இடையே இருக்கின்ற காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, ஆறு போன்றவைகளை தாண்டி படைகள் வரவேண்டியிருப்பதால் அவைகளையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய புல்வெளியை தேர்ந்தெடுத்து அதிலே தன் தலை