இராசேந்திரன் பெரும்படை

கங்கைப்போர் (கி.பி. 1022 - 23)
முதலாம் இராசேந்திரன் பெரும்படையுடன் வடதிசை கங்கை வரை சென்று போரிட்டு வெற்றிகள் பல பெற்று கங்கை நீருடன் திரும்பி, அவ்வெற்ரியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெரும் நகரையும் நிருவி அதனை தன் தலைநகராகவும் கொண்டான். மேலும் சோழகங்கம் என்னும் ஏரியையும் அமைத்து தன் வெற்றியின் அடையாளச்சின்னமாகவும் ஆக்கினான். வடதிசை போரில் இவன் வெற்றி கண்ட நாடுகள் கீழ்வருமாறு:
சக்கரக்கோட்டம் - விசாகப்பட்டினத்திற்கு மேற்கே உள்ள ஒரு நகரம்.
ஒட்டரதேசம் - ஒரிசா.
கோசலம் - கங்கையின் தென்புற நாடு.
தண்டபுத்தி - வங்காளத்தின் மிதுனாபுரி மாவட்டம்
தக்கணலாட்ட்ம் - பிகாரின் ஒரு பகுதி
உதிதிரலாட்டம் - கங்கையின் தென்புறத்திலுள்ள ஒரு பகுதி.

கடாரப்படையெடுப்பு (கி.பி. 1025)
முதலாம் இராசேந்திரன் தன் கடற்படை மூலம் கடல் கடந்து பல நாடுகளையும் வென்றான். அவையாவன:
ஸ்ரீவிசயம் - சுமத்ரா
பண்ணை - பனி - சுமத்ரா தீவின் கீழ்கரைப்பகுதி.
மலையூர் - சுமத்ராவின் ஒரு பகுதி
மாயிருடிங்கம் - மலாய் தீவின் ஒரு பகுதி
இலங்காசோகம் - மலாயாவின் கீழ் பகுதி
மாபப்பாளம் - மலாயாவின் பகுதி
தலைத்தக்கோலம் - தகூவாபா
தமாலிங்கம் - மலாயாவின் தெமிலிங் ஆறு கடலுடன் கலக்கும் இடம்
இலாமுரிதேசம் - மலாயாவின் வட பகுதி
மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள்
வங்காளதேசம் - தற்கால வங்காளம்.-------------------------------------------------------------
கடாரப்படையெடுப்பு (கி.பி. 1025)
முதலாம் இராசேந்திரன் தன் கடற்படை மூலம் கடல் கடந்து பல நாடுகளையும் வென்றான். அவையாவன:
ஸ்ரீவிசயம் - சுமத்ரா
பண்ணை - பனி - சுமத்ரா தீவின் கீழ்கரைப்பகுதி.
மலையூர் - சுமத்ராவின் ஒரு பகுதி
மாயிருடிங்கம் - மலாய் தீவின் ஒரு பகுதி
இலங்காசோகம் - மலாயாவின் கீழ் பகுதி
மாபப்பாளம் - மலாயாவின் பகுதி
தலைத்தக்கோலம் - தகூவாபா
தமாலிங்கம் - மலாயாவின் தெமிலிங் ஆறு கடலுடன் கலக்கும் இடம்
இலாமுரிதேசம் - மலாயாவின் வட பகுதி
மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள்-----
கடாரம் படையெடுப்பு

இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன், பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது.

பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்தது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடையோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும், அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

கி.பி. 1025இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும், இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன்தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும், சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தைச் சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாகச் சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் நியமிக்கப்பட்டான் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
பண்ணை

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.
இலாமுரி தேசம்

இலாமுரி தேசம் என்பது, சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.
------------------------------
சாளுக்கிய படையெடுப்பு
இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் சாளுக்கிய படையெடுப்பு இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களைஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின்மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.------------------------------------
வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.-----நன்றி-----மாயத்தேவர்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்