ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டையொட்டி

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டையொட்டி, தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தொடர் ஜோதி ஓட்டமும், தஞ்சையில் ஆயிரம் மோட்டார் சைக்கிளில் பேரணியும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் இன்று நடைபெற்றது.

இந்த பேரணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன், எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி தஞ்சை மேல வீதி, வடக்கு வீதி, கரந்தை, பள்ளிஅக்ரகாரம் வழியாக கங்கை கொண்ட சோழபுரம் சென்றடைந்தது. நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனை இயக்குனர் குருசங்கர், கவுரவதலைவர் முத்துகுமார், பழனியப்பன், மணிமொழியான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எழுத்தாளர் பாலகுமாரன் பேசியதாவது:–

ராசராசசோழன் மறைவுக்கு பிறகு ராஜேந்திர சோழன் கி.பி. ஆயிரத்து 14–ம் ஆண்டில் அரியணை ஏறினார். வட இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, கம்போடியா, பர்மா, இலங்கை, ஜாவா, நிக்கோபர், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்ற இந்திய அரசர் இவர் ஒருவர் மட்டும் தான். இத்தனை சிறப்புமிக்க இவரது ஆட்சியை போற்றும் வகையில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளும் இவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவும் இன்று நடைபெறுகிறது.

பின்னர் அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறியதாவது:–

கே: உடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழன் சமாதியா?

ப: உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி இல்லை.

கே: ராஜேந்திர சோழனுக்கு அரசு மணிமண்டபம் கட்டுமா?

ப: கண்டிப்பாக அரசு கட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் பேரணியில் இன்டாக், ஜேசிஸ், ஊர்காவல் படை, நேரு யுவகேந்திரா, இருசக்கர வாகனப்பணி உரிமையாளர்கள் நலச்சங்கம், அகில இந்திய எல்.ஜ.சி. முகவர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.------Maalai malar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்