ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி
ராஜராஜனை
வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாக அலுவலராக
இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில்
"ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி
ஆகியோருக்கு செப்புப்படிமங்கள் செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும் அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக்
கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன் திருநீறு மடல் வைத்து
வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில்
இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய்
கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment