Posts

Showing posts from February, 2020

சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :-

Image
சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :- ****************************************************** இன்று சிதம்பரம் நடராசர் கோயிலின் நிர்வாகம் தங்களிடம் உள்ளது, சிதம்பரம் கோயிலில் முடி சூட்டுவதால் நாங்களே சோழ வம்சத்தினர் என அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இவர்களின் கூற்றை தொல்லியல் துறை பொருட்படுத்தவில்லை. தங்களை சோழர் வம்சம் என கூறிக்கொள்ளும் சூரப்பர்கள் இதுவரை பதில் அளிக்காத பல புதிர்களில் சிலவற்றை காண்போம். அக்னி குலம் :- ************** சோழர்கள் தங்களை காசிபர் வழியில் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என செப்பேடுகளில் குறித்துள்ளனர். ஆனால் பிச்சாவரத்தார்களோ தங்களை அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர். சம்பு மகரிஷி செய்த யாகத்தில் சிவ பெருமானின் நெற்றியில் இருந்து வந்த நெருப்புத்துளி அந்த யாகத்தில் விழுந்து வீர வன்னிய ராஜா வந்ததாகவும் அவர் வழியில் தாங்கள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் சோ