Posts

Showing posts from August, 2014

நாமக்கல் ஸ்ரீநரசிம்மர்,ஸ்ரீஆஞ்சனேயர் கோயில்

Image
"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65  மீ  உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது  கோட்டை ஒன்று உள்ளது இதை  ராமச்சந்திர நாயக்கர்  கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில்  திப்பு சுல்தான்  இப்பாறைக் கோட்டையிலிருந்து  ஆங்கிலேயர்களை  எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது.  மகாத்மா காந்தி  அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில்  மகாத்மா காந்தி  பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாமகிரி என்பதே தமிழில்

உடுப்பி கிருஷ்ணர் கோயில்

Image
உடுப்பி கிருஷ்ணர் கோயில்   கர்நாடக  மாநிலம்  உடுப்பி  எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர். விஸ்வகர்மாவால்  செய்யப்பட்டு  துவாரகையில்  ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து,  மத்வராலேயே  பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.  விஸ்வகர்மாவால்  செய்யப்பட்டு  துவாரகையில்  ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து,  மத்வராலேயே  பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது. தட்சனின்  சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய  சந்திரன் ,  சிவபெருமானை  நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன்

தர்மஸ்தலம்

Image
தர்மஸ்தலம்   கர்நாடகாவின்  நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு கோவில் கிராமமாகும்.(மஞ்சுநாதஸ்வாமி கோயில்) அது தங்கத்தில் செய்யப்பட்ட சிவ லிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவிலாகும். இந்தக் கோவில் சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஆனால் மாதவா வம்சாவழியைச் சேர்ந்த  இந்து  குருக்கள் பூஜைகள் செய்கின்றனர். இதுவே இக்கோவிலின் வழக்கத்திற்கு மாறான அம்சமாகும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் லக்‌ட்சதீபா என்னும் தீபத் திருவிழா தர்மஸ்தலத்தின் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருவிழாவாகும். அச்சமயத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 பேர் இந்தக் கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். நவீன வசதிகளுடன் கூடிய விருந்தினர் இல்லங்கள் மற்றும் புனித பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் எந்திரமயமாக்கப்பட்ட சமையலறைகளும் இங்கு உள்ளன. தர்மஸ்தலம் மத ஒற்றுமைக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது, இங்கு புனிதப் பயணம் செய்பவர்களின் ஜாதி, கொள்கைகள் மற்றும் நம்பிக்கை போன்றவை இங்கு தடையாக இருப்பதில்லை. உள்ளூர் தெய்வங்கள் மற்றும் மஞ்சுநாதா (சிவன்) தெய்வங்களுக்கு இணையாக சமண தீர்தங்கா

மூகாம்பிகை

Image
கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும்.  அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில் வீற்றிருக்க, வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் சாந்தம் தவழும் சூழலில் இந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலம் அமைந்துள்ளது. பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் புகழ்பெற்ற மூகாம்பிகை தேவியின் கோயில் இந்த ஸ்தலத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது.   வரலாற்றிலிருந்து சிறு சிறு தகவல்கள் சக்தி வழிபாட்டிற்கு பிரபலமாக அறியப்படும் ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமாக இந்த மூகாம்பிகை தேவி ஆலயமும் ஒன்றாகும். பார்வதி தேவி மூகாசுரன் எனும் அசுரனை வதம் செய்த ஸ்தலம் என்பதால் மூகாம்பிகை என்ற பெயரில் வணங்கப்படுகிறார். ஆதியில் இந்த ஆலயத்தின் மூலசன்னதியில் ஒரு ஜோதிலிங்கம் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஜோதிலிங்கத்தில் குறுக்காக ஓடும் ஸ்வர்ணரேகை எனப்படும் தங்கக்கோடு இந்த லிங்கத்தை சமமற்ற இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. அதன் சிறிய பாகம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளைக்குறிப்பிடுவதாகவ

பெண் குல திலகம் செம்பியன் மாதேவி

Image
பெண் குல திலகம் செம்பியன் மாதேவி 10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் இளவரசியை மணந்தார். க ண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி. கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார். கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள். சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின

தொண்டைமான்

Image
தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி. 1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். . புதுக்கோட்டை தொண்டைமான் அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபு

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலைக்கட்டிய கருணாகரத்தொண்டைமான்

Image
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலைக்கட்டிய கருணாகரத்தொண்டைமான்.------தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த அரச குலத்தவரைக் குறிக்கும். கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன். கரிகாலன ை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். இவன் பல்லவத் தொண்டைமான் குலத்தைச் சேர்ந்தவன். இவன் குல மரபினர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர். பல்லவர் இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன. சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன்

Image
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய ப ீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளா

கோமாதாவைப் பற்றி தகவல்கள்

Image
கோமாதாவைப் பற்றி 50 தகவல்கள் 1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.  2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.  3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார். 4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். 5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை. 6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும். 7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். 8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. 9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வ

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Image
பதினாறு செல்வங்கள்: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை? அதன் விளக்கம் :- 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) 9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்) 10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்) 11.மாறாத வார்த்தை (வாய்மை) 12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி) 13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்) 14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்) 15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு) 16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை) இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று

வாழைப்பூ

Image
வாழைப்பூ இரத்தத்தைச் சுத்தப்படுத்த : வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக்  கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு : இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வயிற்றுப்புண் நீங்க : இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். மூலநோயாளிகளுக்கு : மூலநோயின் பா

திருமலை நாயக்கர் மகால்

Image
  திருமலை நாயக்கர் மகால்    மதுரையை  ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான  திருமலை நாயக்கரால்  கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.  இத்தாலியக் கட்டிடக் கலைஞர்  ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த  இந்தோ சரசனிக் பாணி  என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள்,  அந்தப்புரம் , பூங்காக்கள் , தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்ன