நேதாஜி ஆரம்பித்த.இந்திய தேசியப்படை





நேதாஜி ஆரம்பித்த.இந்திய தேசியப்படை ஆங்கிலேயர்களுடன் போரிட்டது பற்றியும், அவருக்கு உறுதுணையாக இந்திய க்கப்பற்படையில் பணியாற்றிய 20000 பேர் ஆங்கிலேயனுக்கு எதிராக கிளர்ச்சி செய்து மும்பையில் கலகம் விளைவித்ததையும்,கப்பலகளில் ஆங்கிலக்கொடியை இறக்கி விட்டு இந்திய தேசியக்கொடியை பறக்க விட்டதையும் காங்கிரஸ் அரசு வெளியில் சொல்வதில்லை.அதனால் இனி இந்தியப்படை வீரர்களே தனக்கு எதிராக திரும்புவதைக்கண்டு ஆங்கிலேயன் சுதந்திரம் கொடுக்க முன் வந்தான் என்பது சரித்திரம்.அது மட்டும் அல்லாமல் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்காக சண்டை போட எந்த இந்தியனுக்கும் மனம் இல்லை.அப்போது நேதாஜி படையில் 40000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.பின்பு இந்தியாவிலும் பெரிய படையை உருவாக்கினார்.அதைக்கண்டு பயந்தான் ஆங்கிலேயன்.அதனால்தான் நமக்கு சுதந்திரம் கொடுக்க முன் வந்தான்.இது நிதர்சனமான உண்மை.மற்றபடி நாம் காந்தி நேருவைப்பற்றிப்படிப்பதெல்லாம் "உருவாக்கப்பட்ட சரித்திரம்". நோகாமல் பிரதமர் ஆனார் நேரு.காங்கிரஸ்காரன் நேதாஜியையும் அவர் சரித்திரத்தையும் மறைத்து விட்டு இவர்களை முன்னிறுத்தி சரித்திரத்தை எழுதி விட்டார்கள்.இந்திராகாந்தி பிரதமராய் இருந்தபோது இந்திய சரித்திரத்தை எழுதி அதைக்காலப்பெட்டகம் எனப்பெயரிட்டு டெல்லியில் எமெர்ஜென்சி காலத்தில் டெல்லி செங்கோட்டையில் ஓரிடத்தில் புதைத்தனர்.அதை வாஜ் பாய் காலத்தில் வெளியே எடுத்து பார்த்தபோது அதில் நேதாஜி பற்றி ஒரு குறிப்பும் இல்லை.இதுவரை நேதாஜியை இந்த அரசாங்கம் 68 வருடங்களாக கௌரவப்படுத்தவில்லை.மோ
டி அரசு அவருக்கு "பாரத ரத்னா" பட்டம் கொடுக்க முன் வந்ததைப்பாராட்டு வோம்.உலகில் எந்த உண்மையான சரித்திரத்தையும் மாற்றவோ மறைக்கவோ முடியாது.------15-08-2014






Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்