உத்தரகாண்ட் மாநில அரசு, விவசாயிகளுக்கு பென்சன்

August 10,2014------உத்தரகாண்ட் மாநில அரசு, விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம்  60 வயதைக் கடந்த விவசாயிகள் மாதம் 800 ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள்.

விவசாயத்தில் ஈடுபடும் வகையில் மக்களை, குறிப்பாக மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று பென்சன் வழங்கும் வகையில் தங்கள் பகுதிகளில் 100 பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேறு எந்த திட்டத்திலும் ஓய்வூதியம் பெறாமல் இருக்கும் விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் பென்சன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.----thanks----maalai malar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்