திருமூர்த்தி மலையில் காளைத் திருவிழா---
திருமூர்த்தி மலையில் காளைத் திருவிழா------
மனிதன் தோன்றிய முதல் காலகட்டத்தில் அவனுக்கு சிறந்த நண்பனாகவும், உணவுக்காகவும், நாகரீக, விவசாய வளர்ச்சிக்கு மிகவும் உதவிய விலங்கு மாடுகள். இத்தகய சிறப்புகள் உடைய மாட்டிற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலின் போது காணும் பொங்கல் கொண்டாடப்பட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை என்ற இரு நாட்களும் மும்மூர்த்திகளின் ஸ்தலமான திருமூர்த்தி மலையில் காளைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மாடுகளை அழைத்து வந்து குளிப்பாட்டி காலையில் சாமியை தரிசித்து விட்டு அவரவர் வீட்டிற்கு காளைகளுடன் திரும்பி விடுகின்றனர்.
இதற்காக கேரளா, காங்கயம், கரூர், ஈரோடு, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்து தனது காளைகளை அழைத்து வந்திருந்தனர். இவ்வாறு வருவதன்மூலம் தனது முன்னோர்களுக்கும், தனது வாழ்வில் உதவும் காளை மாடுகளுக்கு நன்றி செலுத்துவதாகவும் அவர்கள் கருதுகின்றனர். காலையில் வீடு திரும்பும் போது அவர்களுக்குள் ஜாலியான ரேக்லா ரேசும் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் காங்கயம் காளைகள் , ஜர்ஜி , லம்பாடி, மலைக்காளைகள், சின்னக்காளைகள் போன்ற ரக வகையான மாடுகளும், குதிரைகளில் நாட்டுக்குதிரை, காட்டியவாடி, மார்வார், கத்திவார் போன்ற ரக குதிரைகளும் வந்திருந்தன.
சுமார் 2500-க்கும் மேற்பட்ட காளை வண்டிகள் 24-ஆம் தேதி இரவு தங்கி விட்டு அமாவாசை அன்று காலையில் சாமி தரிசித்து விட்டு வீடு திரும்பினர். அப்போது அவர்கள் நம்மிடம் தெரிவித்த ஒருமித்த கருத்து ஜல்லிக்கட்டு, காளை பந்தயம் இரண்டிற்கும் தடை விதிக்க பட்டுள்ளது. இந்த தடையை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில் ' காளை பந்தயத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பல காளை மாடுகள் குறைந்த விலைக்கு கேரளாவிற்கு அடி மாடுகளாக செல்கின்றன. விவசாயத்தில் இயந்திரத்தை உபயோகிப்பதால் இயற்கை உரமான(சாணம்) மற்றும் விவசாயிகளின் நண்பன்(மண்புழு) அழிகின்றன. இதனால் இன்று 100 விவசாயிகளில் 16 விவசாயிகளே மாடுகளை வைத்துள்ளனர். இவ்வாறு அடிமாடாக செல்வதால் இதன் இனப்பெருக்கமும் குறைந்து வருகின்றன. மாடுகளின் எண்ணிக்கை குறைவதால் விவசாயம் சிறிது சிறிதாக பாதிக்கப்படுவதாக' கூறினர்
ரேஸ்: 200, 300மீட்டர்களை எந்த வண்டி மிகக்குறைந்த அளவில் கடக்கிறதோ அந்த வண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கூடும். இதில் ஒவ்வொரு வண்டியாக அனுப்பப்படும், இதனால் எந்த ஒரு ஆபத்தும் யாருக்கும் ஏற்படப்போதில்லை என்றும், இந்த பந்தயத்தில் குதிரையுடன் மோதி வெற்றி பெறும் காளை மாடுகளை பெரும் வெற்றி அடைந்ததாக கருதப்படும்.
- மு. ரமேஷ்
படங்கள்: மு. குகன்
Comments
Post a Comment